IPL 2025: "தங்கம் சார்..." - ஸ்டெயின், பாண்ட் சொல்லும் சமகால சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?

23 hours ago
ARTICLE AD BOX

ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒருவாரம் கூட முழுமையாக இல்லை. இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைத்து வீரர்களும் தங்கள் ஐ.பி.எல் அணிகளுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்டர்னேஷனல் லெவலில் எப்படி இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய போட்டியோ, அதுபோல ஐ.பி.எல்லில் சென்னை vs மும்பை. இந்தப் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது.

பும்ராபும்ரா

இந்தப் போட்டியில், மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. பார்டர் கவாஸ்கர் தொடரின்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்காத பும்ரா, இன்னும் முழுமையாகக் காயத்திலிருந்து மீண்டு வரவில்லை என்றும், ஐ.பி.எல்லில் முதல் சில போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம்தான் என்றும் பேச்சுக்கள் உலாவுகின்றன.

இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஐகானிக் வேகப்பந்துவீச்சாளர்களான ஷேன் பாண்ட் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர், இந்தத் தலைமுறையின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் எனப் பும்ராவையும், ககிஸோ ரபாடாவையும் பாராட்டியிருக்கின்றனர்.

ஷேன் பாண்ட்ஷேன் பாண்ட்

ஸ்போர்ட்ஸ் ஊடகம் ஒன்றுக்குப் பேசிய ஷேன் பாண்ட், ``பும்ராவைப் பாருங்கள். உலகின் சிறந்த பந்துவீச்சாளரான அவர், திறமை, கடின உழைப்பு, பேட்ஸ்மேனுக்கு ஏற்றவாறு தயாராகுதல், உள்ளுணர்வைச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் கலவையாகத் திகழ்கிறார். இந்த நான்கு விஷயங்களையும் இணைத்ததால்தான் உலகின் நம்பர் ஒன் பவுலராக அவர் இருக்கிறார். நிறையப் பந்துவீச்சாளர்களிடம் இந்த நான்கு விஷயங்கள் இல்லை" என்று கூறினார்.

ரபாடாரபாடா

ஷேன் பாண்டின் கருத்தைத் தொடர்ந்து பேசிய டேல் ஸ்டெயின், ``பும்ராவும், ரபாடாவும்தான் ஆல்-இன்-ஆல் பேக்கேஜ் பவுலர்கள். இருவரும் ஆட்டத்தில் எந்த நேரத்திலும் பந்துவீசி விக்கெட் வீழ்த்தும் திறன் உடையவர்கள். இவர்கள் இருவரும் தங்கம் போன்றவர்கள். இது வெறும் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசுவது மட்டும் அல்ல, கேப்டனுக்குத் தேவைப்படும்போது விக்கெட் எடுத்துக்கொடுப்பது பற்றியதும்" என்று கூறினார்.

GOAT Bumrah: `பேட்டர்களின் கொடுங்கனவு அவன்; தனியொரு நம்பிக்கை’ - எப்படி சாதித்தார் பும்ரா? | Ep 1

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Read Entire Article