ARTICLE AD BOX
2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில், மார்ச் 23 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க உள்ளது. ஆனால், இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள உள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கரை பிளேயிங் லெவனில் ஆட வைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அந்த அணிக்கு ஏற்படலாம். அந்த அளவுக்கு அந்த அணி சிக்கலை எதிர்கொள்ள உள்ளது. ஏனெனில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார். மேலும், முன்னணி வேகப்பந்துவீச்சாளரான பும்ராவும் அந்த போட்டியில் பங்கேற்க மாட்டார்.

பும்ராவுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஓவர் ரேட்டில் தொடர்ந்து விதிகளை மீறியதால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அது சரியாக 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக அமைந்து இருப்பது தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் துரதிர்ஷ்டம்.
அதிலும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பரம எதிரி அணியாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்த நிலையில் கேப்டன் உட்பட முன்னணி வீரர்கள் இருவர் இல்லாததால் பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்ய உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் அந்த அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது. துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் வில் ஜேக்ஸ் இணைந்து களமிறங்க வாய்ப்பு உள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் வரிசையில் திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் களமிறங்குவார்கள்.
அவர்களைத் தொடர்ந்து நமன் திர், ராபின் மின்ஸ் களம் இறங்குவார்கள். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் ட்ரென்ட் போல்ட் மற்றும் தீபக் சஹார் இணைந்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சை பலப்படுத்த வேண்டும். ஆனால், மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாட வாய்ப்பு உள்ளது.
CSK- ஓங்கி அடித்த தோனி.. எதிரணிகள் காலி.. மெய்சிலிர்த்த ரசிகர்கள்.. சிஎஸ்கே அணியின் பயிற்சி வீடியோ
அர்ஜுன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. சுழற் பந்துவீச்சாளராக மிட்செல் சான்ட்னர் மற்றும் கர்ண் சர்மா களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.