ARTICLE AD BOX
சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இன்று முதல் கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்ஸ்மேன்கள் எப்போதுமே ரன் குவிப்பில் பட்டையை கிளப்புவார்கள்.பேட்டிங், பவுலிங் என இரண்டுலுமே சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படும். அந்த வகையில் சென்னை அணிக்காக ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

2008 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்று இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெயரை ஆஸ்திரேலிய வீரர் ஹைடன் பெற்றார். 2010 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னா மீண்டும் அதிக ரன்கள் அடித்து அசத்தினார்.
2011 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஹஸி அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். மீண்டும் 2012 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா அதிக ரன்கள் குவித்த சிஎஸ்கே வீரர் என்ற பெயரைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டு மீண்டும் மைக்கேல் ஹஸி அதிக ரன்கள் குவித்த சிஎஸ்கே வீரர் என்ற பெயரை பெற்றார். 2014 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் ஸ்மித் மற்றும் 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மெக்குல்லம் ஆகியோர் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்ற பெயரை பெற்றனர்.
2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக முதல் முறையாக விளையாடிய அம்பத்தி ராயுடு அதிக ரன் குவித்த சிஎஸ்கே வீரர் என்ற பெயரை பெற்றார். 2019 ஆம் ஆண்டு தல தோனி சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார். 2020 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வீரர் டுப்ளசிஸ் அதிக ரன்கள் குவித்த சிஎஸ்கே வீரர் என்ற பெயரை பெற்றார். 2021 ஆம் ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக அதிக ரன்கள் எடுத்தார்.
இதைப் போன்று 2022 ஆம் ஆண்டும் ருதுராஜ் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் பெற்றார். 2023 சீசனில் காண்வே அதிக ரன் குவித்த சிஎஸ்கே வீரர் என்ற பெயரை பெற்றார். நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு சீசனில் மீண்டும் ருதுராஜ் அந்தப் பெயரை பெற்றார். கடைசியாக நடைபெற்ற நான்கு சீசன்களில் ருதுராஜே சிஎஸ்கே அணிக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற பெயரை மூன்று முறை பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்முறையும் மீண்டும் அந்தப் பெயரை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.