மும்பை – சிஎஸ்கே இல்ல.. ஆர்சிபி – கேகேஆர் தான் எல் க்ளாசிகோ.. கொல்கத்தாவுக்கு ஃபிளவர் சவால்

6 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2025 சீசன் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமான மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டியை விட அந்தப் போட்டிக்கு தான் ரசிகர்களிடம் உச்சகட்ட எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் தலா 5 கோப்பைகளை வென்றுள்ள மும்பையும் சென்னையும் ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாகும். மேலும் கடந்தக் காலங்களில் அவ்விரு அணிகள் மோதியப் போட்டிகளில் அனல் பறந்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. அதனால் ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை மோதும் போட்டிகளை எல் க்ளோசிகோ என்று அனைவரும் வர்ணிப்பது வழக்கமாகும்.

எல் க்ளாசிகோ:

இந்நிலையில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதும் போட்டிகளே எல் க்ளாசிகோ என்று ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். இம்முறை கொல்கத்தா அணியை வீழ்த்துவதற்கு தயாராக இருப்பது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அந்தப் போட்டி அச்சுறுத்தலைக் கொடுப்பதாக இருக்கிறது. கொல்கத்தாவை பொறுத்த வரை நாளை இரவு எல் க்ளாசிகோ’வாக இருக்கும் என்று நம்புகிறேன்”

“2025 ஐபிஎல் தொடரை துவங்க அது சிறந்தப் போட்டியாக இருக்கும். எங்கள் புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இம்முறை நாங்கள் அனுபவமிக்க அணியை உருவாக்கியுள்ளோம். எனவே இந்தத் தொடரில் உள்ள சவாலை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். நாங்கள் அவருக்கு பின்னே நிற்போம். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி நல்ல ஃபார்மில் இருக்கிறார்”

கொல்கத்தா சவால்:

“சுனில் நரேன் பற்றி பல வருடங்களாக தெரியும். ஆனால் அப்படிப்பட்ட சிறந்த வீரர்களை எதிர்கொள்வதற்காகவே நீங்கள் விளையாடுகிறீர்கள். ஐபிஎல் தொடரில் விளையாடுவது சர்வதேசத்திற்கு நிகராக இருக்கும். அந்தத் தொடரில் விளையாடுவது உங்களுடைய தரத்தை உயர்த்திக்கொள்ள உதவும் என்பது சிறந்த விசயமாகும். இங்கே நிறைய பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் தொடரின் முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி வலுவாக பெரியவர்களாக வருகின்றனர்”

இதையும் படிங்க: இம்முறை விராட் கோலியை சமாளிக்க இந்த திட்டம் வெச்சுருக்கேன்.. ஆர்சிபியை எதிர்கொள்வது பற்றி வருண்

“அதே சமயம் விராட் கோலி போன்ற வீரர்களுக்கும் இங்கே இடம் இருக்கிறது. உடல் தகுதியுடன் இளமையாக இருக்கும் அவரும் எங்களுக்காக அசத்துவார்” என்று கூறினார். முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் 34 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 20 வெற்றிகளையும் பெங்களூரு 14 வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசி 5 போட்டிகளில் பெங்களூரு 4 தோல்வியை பெற்றுள்ளதாலேயே கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்துடன் ஃபிளவர் இப்படி தெரிவித்துள்ளார்.

The post மும்பை – சிஎஸ்கே இல்ல.. ஆர்சிபி – கேகேஆர் தான் எல் க்ளாசிகோ.. கொல்கத்தாவுக்கு ஃபிளவர் சவால் appeared first on Cric Tamil.

Read Entire Article