IPL 2025: கேப்டன் ரஹனே மீதுதான் ஃபுல் போக்கஸ்… மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்…!!!

18 hours ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் மற்றும் நடனக் கலைஞர், நடிகை தன்ஷ்ரீ ஆகியோரின் விவாகரத்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் 2020-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், சுமார் 818 நாட்களுக்கு பிறகு விவாகரத்து பெற முடிவு செய்தனர். அதன்படி சமீபத்தில் இவர்கள் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இன்று தொடங்கவுள்ள IPL தொடரை முன்னிட்டு, பாம்பே உயர் நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி, இந்த ஜோடிக்கு மார்ச் 20-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்துச் சான்றிதழ் வழங்கியது.

விவாகரத்துக்குப் பின் சஹால் தன்ஷ்ரீக்கு ₹4.75 கோடி ஜீவனாம்சம் தொகை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளார். இதனை முன்னிட்டு, தன்ஷ்ரீ மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிலர், “சுயாதீனமாக வாழும் பெண்ணாக கூறும் இவர், ஏன் கணவனை விட்டு பிரியும் போது அவரிடமிருந்து பணம் பெறுகிறார்?” என கேள்வி எழுப்பினர். மேலும், “818 நாட்களுக்கு ₹4.75 கோடி என்பது, தினம் ₹50,611 என தன்னை மதிப்பீடு செய்துவிட்டார்” எனக் கருத்து பதிவு செய்துள்ளனர்.

மேலும், சிலர் எலான் மஸ்கின் AI டூல் Grok-ஐ பயன்படுத்தி, ஜீவனாம்சம் தொடர்பான நியாயத்தை கேட்டுள்ளனர். Grok கூறியதாவது, “சஹாலின் விவாகரத்து நாள் அவருடைய நம்பிக்கையையும், தனித்துவத்தையும் வெளிக்காட்டுகிறது” என தெரிவித்தது. தன்ஷ்ரீ மீது வரும் விமர்சனங்களை தொடர்ந்து, அவரை கிண்டலடிக்கும் மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. Kings XI Punjab அணிக்காக சஹால் விளையாடவுள்ள நிலையில், இந்த விவாகரத்து விவகாரம் IPL தொடக்கத்திற்கு முன்பாகவே கவனத்தை ஈர்த்துள்ளது.

Read Entire Article