IPL 2025: ஐ.பி.எல். திருவிழாவில் எம்.எஸ்.தோனிக்கு காத்திருக்கும் சாதனைகள்!

11 hours ago
ARTICLE AD BOX

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச், 22-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஐ.பி.எல். சீசன் வரலாற்றில் மூத்த வீரரான மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல். 2025 சீசனில் புதிய சாதனைகளை சாதிக்க வாய்ப்பு இருக்கிறது. அது பற்றிய தகவலை காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

மார்ச் 22-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். 18-வது சீசன் மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

மார்ட் 23-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை மும்பை அணியுடன் மோதுகிறது. மார்ச் 28 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னையின் லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் சிங்ஸ் அணி என்றால் தோனியில் முகம் வரும் அளவுக்கு அவருடைய ரசிகர்கள் அந்த அணிக்கு ஆதரவு வழங்குபவர்களாக இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனியின் பங்களிப்பை எவ்வளவு கொண்டாடுகிறார்களோ அதைவிட சி.எஸ்.கே.-வில் தோனி பங்களிப்பை பார்த்து கிரிக்கெட் ரசிகர்களானவர்கள் இருக்கிறார்கள். சேப்பாக்க, தோனி, ரெய்னா, அஸ்வின் என அனைத்தும் ரசிகர்களுக்கு ஒரு எமோசன் என்றாகிவிட்டது. தோனியை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காணமுடிவதில்லை என்ற ஏக்கத்திற்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஐ.பி.எல். திருவிழாவில் அவர் விளையாட்டும் போட்டிகளை கொண்டாடி வருகிறார்கள்.

ஐ,பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தோனி இந்தத் தொடரின் முகமாக இருந்து வருகிறார். 43 வயதாகும் தோனி சில ரெக்கார்டுகளை முறியடிக்க இருக்கிறார்.

ஐ.பி.எல். 2025 தொடரில் தோனி அரை சதம் அடித்தால், வரலாற்றிலேயே அரை சதம் அடித்த ‘oldest player' என்ற பெருமையை பெருவார். இந்த லிஸ்ட்டில் கில்கிறிஸ்ட், கெயில், டிராவிட், ஆகியோர் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற தோனிக்கு இன்னும் 19 ரன்கள் தேவை. சி.எஸ்.கே. அணிக்காக விளையாடி அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 4,687 ரன் எடுத்து முதலிட்டத்தில் உள்ளார். தோனி, சி.எஸ்.கே.வுக்காக விளையாடி 4669 ரன்கள் எடுத்திருக்கிறார்.

ஐ.பி.எல். வர்லாற்றில் எம்.எஸ். தோனி மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக பல ரெக்கார்டுகளை வைத்துள்ளார். அப்படியிருக்க, இன்னும் 10 விக்கெட்டுக்களை எடுத்தால் ‘200’ ஸ்டெம்பிங்க், ரன் அவுட், கேட் என ‘dismissals’ எட்டிய முதல் விக்கெட் கீப்பர் சாதனை படைப்பார். ஐ.பி.எல். வரலாற்றில் இது மிகப் பெரிய ரெக்கார்டு. தோனி இதுவரை 190 பேட்ஸ்மென்களை அவுட் ஆக்கியிருக்கிறார்.

Just Thala casually making us melt! 🥹💛 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/7Z5nPusqAh
— Chennai Super Kings (@ChennaiIPL) March 18, 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:

சிஎஸ்கே முழு வீரர்கள் பட்டியல் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் கரண், ஷாய்க் ரஷீத், அன்சுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜாப்னித் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டான், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி மற்றும் ஆண்ரே சித்தார்த்.

Read Entire Article