ARTICLE AD BOX
இந்தியா vs பாகிஸ்தான்: சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தார்.

இந்தியா vs பாகிஸ்தான்: விராட் கோலி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தார். துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்ட விராட் கோலி 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சச்சின் சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு பீல்டிங்கிலும் அசத்தி சாதனை படைத்தார்.

பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் கிங் விராட் கோலி அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற அசாருதீனின் சாதனையை முறியடித்து ரசிகர்களுக்கு சிறப்பான எண்டர்டெய்மெண்டை வழங்கி உள்ளார்.

இந்திய பாகிஸ்தான் போட்டியில் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் ஆனார். 2008 முதல் கோலி 158 கேட்ச் பிடித்து அசாருதீன் சாதனையை முறியடித்தார்.

குல்தீப் பந்துவீச்சில் நசீம் ஷா கேட்ச் கொடுத்தார். பின்னர் குஷ்தில் ஷாவும் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் 140, டிராவிட் 125, ரெய்னா 102 கேட்ச் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா 96 கேட்ச் பிடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிக கேட்சுகள்:
விராட் கோலி - 158
முகமது அசாருதீன் – 156
சச்சின் டெண்டுல்கர் - 140
ராகுல் டிராவிட் – 125
சுரேஷ் ரெய்னா – 102