ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றாலும் ஒரு ருசிகர சம்பவம் அதில் நடந்தது. ஆஸ்திரேலியா அணி 265 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தார்கள். இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கில் எட்டு ரன்களிலும், ரோகித் சர்மா 28 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
ஸ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் இழந்தாலும், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடி வந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

ஒரு கட்டத்தில் விராட் கோலி இன்னும் எட்டு ஓவர்கள் எஞ்சிய நிலையில் 40 ரன்கள் இருந்த போது தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி ஆட்டம் இழந்தார். இதன் மூலம் விராட் கோலி 16 ரன்களில் சதத்தை தவறவிட்டார். விராட் கோலி ஆட்டமிழந்த உடன் களத்தில் நின்ற கே எல் ராகுல் டென்ஷனாகி அவரை திட்டினார்.
இதற்கு காரணம் வெற்றிக்கு இன்னும் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கே என் ராகுல் ஒரு முனையில் அதிரடியாக ஆடி வந்தார். இந்த சூழலில் விராட் கோலி கடைசி வரை நின்று சதம் அடிப்பது மட்டுமல்லாமல், இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ய அணி நிர்வாகம் திட்டம் போட்டு இருந்தது.
ஆனால் விராட் கோலி அவசரப்பட்டு தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி பெவிலியன் திரும்பினார். விராட் கோலி ஆட்டம் இழந்த உடன் பெவிலியினில் அமர்ந்திருந்த கம்பீரும் டென்ஷன் ஆகி விராட் கோலியை திட்டினார். இந்த கட்டத்தில் இந்த ஷாட் தேவையா என்பது போல் கம்பீர் ஒரு ரியாக்ஷன் கொடுத்தார்.
இதனை அடுத்து போட்டி முடிவடைந்த உடன் விராட் கோலியும், கே எல் ராகுலும் சந்தித்துக் கொண்டனர். அப்போது ராகுல், ஏன் தேவையில்லாமல் அந்த சாட்டை ஆடினாய் என்று கோலியிடம் கேட்டார். அதற்கு விராட் கோலி பரவாயில்லை அதுதான் நீ இருக்கிறாயே என்பது போல் பதில் சொல்லி அவரை கட்டி அணைத்தார்.