ARTICLE AD BOX
IND vs NZ ICC Champions Trophy Final 2025 : நியூசிலாந்து 2ஆவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மார்ச் 9-ம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

IND vs NZ ICC Champions Trophy Final 2025 : IND vs NZ சாம்பியன்ஸ் டிராபி 2025 ஃபைனல்: நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 9-ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் சாம்பியன் பட்டத்திற்காக மோத உள்ளன. அரையிறுதியில் நியூசிலாந்து அணி சூப்பராக விளையாடியது. தென்னாப்பிரிக்காவுக்கு திரும்ப வாய்ப்பே கொடுக்கல.

கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் சதம் விளாசியது போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. வில்லியம்சன் 102 ரன்களும், ரச்சின் 108 ரன்களும் எடுத்தனர். அதனால நியூசிலாந்து அதிகபட்சமாக் 362 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்த ஸ்கோர் தான் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. கடின இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டேவிட் மில்லர் 67 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒரு போட்டியில் கூட தோற்காத டீம் இந்தியா:
இந்தியா அந்த பெரிய தோல்விக்கு பழி வாங்க காத்துட்டு இருக்கு. இந்திய டீம் இந்த டூர்னமெண்ட்ல வேற லெவல்ல விளையாடிட்டு இருக்காங்க. இதுவரைக்கும் ஒரு மேட்ச் கூட தோக்கல. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை ஜெயிச்சு இந்திய டீம் ஃபைனலுக்கு வந்துட்டாங்க. நியூசிலாந்து டீம் இந்தியாவோட ஒரு மேட்ச்ல மட்டும் தோத்துட்டாங்க. மத்தபடி நியூசிலாந்து டீமும் சூப்பரா விளையாடி இருக்காங்க. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்னு எல்லாத்துலயும் நல்லா விளையாடி இருக்காங்க. அதனால இந்த ஃபைனல்ல ரெண்டு டீமுக்கும் செம டஃப் ஃபைட் இருக்கும். ரெண்டு டீம்லயும் நிறைய மேட்ச் வின்னர்ஸ் இருக்காங்க. எல்லாரும் நல்ல ஃபார்ம்ல இருக்காங்க.

இரண்டாவது முறை சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியா-நியூசிலாந்து மோதுறாங்க
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மார்ச் 9-ம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஃபைனலில் மோதுறாங்க. இந்த ரெண்டு டீமும் இந்த டூர்னமெண்ட்ல ஃபைனல்ல மோதுறது இது ரெண்டாவது தடவ.

2000-ம் ஆண்டு நடந்த ஃபைனல் மேட்ச்ல நியூசிலாந்து அணி இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயிச்சுட்டாங்க. கிறிஸ் கிரெயின்ஸ் 102 ரன்கள் அடிச்சு வேற லெவல்ல விளையாடினாரு. அந்த மேட்ச்ல இந்திய டீமோட கேப்டன் சவுரவ் கங்குலி. அந்த பெரிய ஃபைனல்ல கங்குலி 117 ரன்கள் அடிச்சு செஞ்சுரி அடிச்சாரு. சச்சின் டெண்டுல்கரும் சூப்பரா விளையாடி 69 ரன்கள் எடுத்தாரு.

துபாய் மைதானம் எப்படி?
இந்த தொடர் முழுவதும் இந்தியா துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த மைதானத்தில் இதுவரையில் இந்தியா ஒரு அரையிறுதிப் போட்டி உள்பட 4 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இந்த 4 போட்டியிலும் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், அதிகபட்சமாக 264 ரன்களை இந்த தொடரில் சேஸ் செய்திருக்கிறது. முதலில் விளையாடிய போது இந்தியா 249 ரன்கள் எடுத்திருக்கிறது.
ஆனால், நியூசிலாந்தைப் பொறுத்த வரையில் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திராவின் அபார சதத்தால் 362 ரன்கள் குவித்தது. இதே ஃபார்முடன் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இது வேற மைதானம், அது வேற மைதானம் என்பதால் 300 ரன்கள் அடிப்பது கடினம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 355/5 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 271/10 ரன்கள் மட்டுமே எடுத்து 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த மைதானத்தில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 287/8. குறைந்த ஸ்கோர் 168/10. இந்த ஸ்கோர் எடுத்தும் ஐக்கிய அரபு அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்த மைதானத்தில் ஒரு அணி எடுத்த ரொம்ப குறைவான ஸ்கோர் 91 ரன்கள் ஆகும்.