ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்த புகைப்படம், தங்கள் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஆறுதல் தேடி வருகின்றனர் இந்திய ரசிகர்கள். பல இந்திய ரசிகர்களுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் மோதுகிறது என்றாலே மன அழுத்தம் ஏற்பட்டுவிடும்.
அதற்குக் காரணம் 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி என இரண்டிலும் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி இருந்ததுதான். சமீபத்தில் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். அப்போது ரசிகர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டது. பலரும் டிராவிஸ் ஹெட்டை திட்டி தீர்த்து வந்தனர்.

இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி இந்த இலக்கை எளிதாக எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த பின் ஆஸ்திரேலிய வீரர்கள் சோகத்துடன் வெளியேறினர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் தலையை குனிந்தபடி வெளியேறினார். அந்த காட்சிகளை புகைப்படம் ஆக எடுத்து சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
"இப்போது எப்படி இருக்கு ட்ராவிஸ் ஹெட்டு.. உங்களுக்கு எப்படி இருக்கிறதோ, எங்களுக்கு அன்று அப்படித்தான் இருந்தது" என பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் 9வது ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களுக்கு பெரிய ஆறுதல் அளித்தார் வருண் சக்கரவர்த்தி. வருண் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தார் ட்ராவிஸ் ஹெட்.
IND vs AUS செமி பைனலில் அஸ்வின் சொன்னது அப்படியே நடந்தது.. நிரூபித்த வருண்.. வாயை பிளந்த ரசிகர்கள்
இந்திய அணி தற்போது அரையிறுதியை மட்டுமே தாண்டி உள்ளது. இன்னும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி மீதம் உள்ளது. அதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே தற்போது முக்கியமானது.