ARTICLE AD BOX
IML 2025: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் ரன்னர் அப் ஆனது.
ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டி, விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது.
2025ம் ஆண்டு தொடங்கியதும் கிரிக்கெட் விழாவும் தொடங்கியது போல் உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, டபிள்யூபிஎல், சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் என போட்டிகள் அடுத்தடுத்து நடந்து வந்தன. அடுத்து ஐபிஎல் திருவிழா தொடங்க தயாராக இருக்கிறது.
நேற்றிரவு ராய்ப்பூரில் நடந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸும், பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸும் விளையாடியது.
முதலில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் டாஸ் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்தது. டுவைன் ஸ்மித் 45 ரன்களும், சிம்மன்ஸ் 57 ரன்களும் விளாசினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். கேப்டன் பிரையன் லாரா 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
இந்தியா மாஸ்டர்ஸ் பந்துவீச்சு தரப்பில், வினய் குமார் 3 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளையும், நேகி, பின்னி தலா 1 விக்கெட்டையும் சுருட்டினர்.
இதையடுத்து, 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங் செய்தது இந்தியா மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணி.
அப்போது ஓபனிங் பேட்ஸ்மேனாக விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடு, 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து அந்த அணி ஜெயித்தது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) என்பது ஒரு மதிப்புமிக்க உலகளாவிய போட்டியாகும், இது பல்வேறு சிறந்த விளையாட்டு வீரர்களை ஒன்றிணைத்து, உயர் மட்டத்தில் போட்டியிட வைக்கிறது. இந்த லீக்கில் பொதுவாக அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் அந்தந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய முன்னாள் வீரர்கள் இடம்பெறுவார்கள். சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பொழுதுபோக்கை ஊக்குவிக்கும் அதே வேளையில், மேம்பட்ட திறன்கள் மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக IML செயல்படுகிறது.
இது ஒரு போட்டித்தன்மை வாய்ந்த ஆனால் கொண்டாட்டமான சூழலை வழங்குகிறது, அங்கு விளையாட்டு வீரர்கள் தங்கள் உச்ச போட்டி ஆண்டுகளுக்குப் பிறகும், பெரும்பாலும் உயர் மட்டத்தில் விளையாட்டில் ஈடுபட முடியும். இந்த தனித்துவமான நிகழ்வு முந்தைய தலைமுறை விளையாட்டு வீரர்களை இணைக்கிறது மற்றும் உலகளாவிய விளையாட்டு கலாச்சாரத்தை வளர்க்கிறது, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஒன்றிணைக்கிறது மற்றும் அடுத்த தலைமுறை திறமைகளை ஊக்குவிக்கிறது.

டாபிக்ஸ்