ARTICLE AD BOX
Ilayaraja: பிரபல இசையமைப்பாளரான இளையராஜா தான் ஏன் இசையில் உதவியாளரை வைத்துக்கொள்வதில்லை என்பது குறித்து அண்மையில் சன் நியூஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார். மேலும் அதில், சிம்பொனி இசைக்குறித்தும், அதை தான் பயன்படுத்திய விதம் குறித்தும் பேசி இருக்கிறார்.
ஹார்மனி சிஸ்டம் இருக்கிறது.
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, ‘ஆரம்பத்திலிருந்து நான் கேட்ட கிளாசிக்கல் உள்ளிட்ட மியூசிக்கை வைத்துக்கொண்டுதான் நான் சினிமாவில் ஹார்மோனி இசை சிஸ்டத்தை நான் கொண்டு வந்தேன். எம் எஸ் வி அண்ணனுடைய இசையிலும் இந்த ஹார்மனி சிஸ்டம் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் ஹார்மனி இசைதான் வேண்டும் என்ற ரீதியில் பெறப்பட்டவை கிடையாது. அது போகிற போக்கில் அப்படியே நடந்து சென்றிருக்கிறது.
எப்படி வேலை செய்கிறது?
கிட்டார் வாசிப்பவரை டியூனுக்கு ஏற்றப்படி கிட்டாரை வாசிக்கச் சொன்னால், அவரே தீர்மானம் செய்து இசையை வாசிப்பார். ஆனால், ஹார்மனி இசையில் நீங்கள் இசைக்குறிப்புகளை கொடுத்து, உங்களுக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும். அன்றைய காலத்தில் இந்த ஹார்மனி இசையை செய்து கொடுப்பதற்கு ஆள் இல்லை. அதன் பின்னர் அதற்கு உதவியாளர்கள் வந்தார்கள்.
‘அன்னக்கிளி’ படத்தின் பாடல்களுக்கு அமோக வரவேற்பு
ஜிகே வெங்கடேசன் தான் அதை செய்தார். அப்போது நான் பாடலை ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தேன். இதைக்கேட்ட செல்வராஜ், ஜிகே வெங்கடேசனிடம் சென்று ராஜா பிரமாதமாக பாடல்களை இசையமைக்கிறான். ‘அன்னக்கிளி’ படத்தின் பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று கூறினார்.
பின்னணி இசையை அமைக்க முடியாது
அப்போது அவன் பாட்டெல்லாம் நன்றாகத்தான் போடுவான்; அவனால் பின்னணி இசையை அமைக்க முடியாது என்று கூறிவிட்டார். உடனே நாம் தான் உதவியாளராக இருந்து இவற்றையெல்லாம் செய்கிறோம். இவர் நமக்கு செய்யத் தெரியாது என்று சொல்கிறாரே என்று அன்றைக்கு ஒரு முடிவெடுத்தேன். நாம் யாரையுமே உதவியாளராக வைத்துக் கொள்ளக் கூடாது அனைத்தையும் நாம்தான் செய்ய வேண்டும் என்று...
துப்பினாலும் பராவாயில்லை
நம்முடைய இசை கேவலமாக இருக்கிறது துப்பினாலும், அந்த விமர்சனம் நமக்கே வரட்டும். நன்றாக இருக்கிறது என்று கூறினால் அதுவும் நமக்கே வரட்டும். ஆனால் நான் யாரையுமே உதவியாளராக வைத்துக் கொள்ள மாட்டேன் என்று அன்றைக்கு முடிவெடுத்தேன்.
சிம்பொனி இசைக்கு சான்றுகள்
‘என் இனிய பொன் நிலாவே’, ‘நினைவோ ஒரு பறவை’ ‘மடை திறந்து பாடும்’ இவையனைத்திலும் நான் சிம்பொனி இசையை பயன்படுத்தி இருக்கிறேன். இதை இசையை நான் கொடுத்து மக்களை அந்த இசைக்கு பழக்கப்படுத்தி இருக்கிறேன்.’ என்று அதில் (சன் நியூஸ்) அவர் பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்