ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் ‘இளமை மார்க்கண்டேயினி’ திரிஷா ‘தல’ அஜித்துக்கு ஜோடியான ‘விடாமுயற்சி’ நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து அஜித்துடன் அவர் இணைந்து நடித்த ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது.
மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்புவுடன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், நான்ஸ்டாப் குஷியில் உள்ளார்.
இந்நிலையில்தான் திரிஷா எக்ஸ் தளத்தில் இன்று காலை முதல் டிரெண்டாகி தெறிக்கிறார். அதாவது, அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியானது காரணமாகி விட்டது.
இளமை தோற்றத்தில் அஜித், திரிஷாவுடன் இருக்கும் காட்சி டீசரில் ஒரு செகன்ட் வந்து போன நிலையிலேயே ரசிகர்கள் அதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அந்த பாடல் காட்சியின் பல புகைப்படங்கள் தற்போது வெளியாகி திரிஷாவை டிரெண்டாக்கி விட்டன.
மாபெரும் வசூல் வேட்டையை இப்படம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில், இந்த படத்துக்காக அஜித் செய்துள்ள ஸ்டண்ட் காட்சிகளை எல்லாம் படக்குழு மேக்கிங் வீடியோவாக வெளியிட்டு படத்தை ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் புரமோட் செய்து வருகிறது. அப்புறமென்ன, 6-ந்தேதி திரையரங்கு எல்லாம் திருவிழா தான்..!
The post திரையரங்கு எல்லாம் திருவிழா வருகிறது; ‘விடாமுயற்சி’ திரிஷா போட்டோவும் டிரெண்டிங்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.