ARTICLE AD BOX
மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர். துபாய் ஆடுகளத்தில் மற்ற அணி வீரர்கள் தடுமாறும் நிலையில், இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அபாரமாக சதம் அடித்தார். இதன் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் விராட் கோலி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 743 புள்ளிகள் பெற்று இருக்கும் அவர் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்ச்சலை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய நிலையில் கில் தற்போது 817 ரேட்டிங் உடன் இருக்கின்றார். இதன் மூலம் பாபர் அசாமுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் 47 புள்ளிகள் ஆக அதிகரித்து இருக்கிறது.
பாபர் அசாம், 770 உடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 757 ரேட்டிங் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்கா வீரர் கிளாசன் 749 ரேட்டிங் உடன் நான்காம் இடத்திலும், கோலி 743 ரேட்டிங் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.
இந்த சூழ்நிலையில் கோலி இன்னும் ஒரு சதம் கூட அடித்தாலும் பாபர் அசாமின் இடத்தை பிடித்து விடுவார். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். இதன் மூலம் முதல் 10 இடங்களில் இந்திய அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.
இதேபோன்று பாகிஸ்தான் எதிரான போட்டியில் அபாரமாக விளையாடிய கே எல் ராகுல் இரண்டு இடங்கள் முன்னேறி 15 வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் தடுமாறிய நிலையில் அவர் ஒரு இடம் சரிந்து 13-வது இடத்தில் சந்தித்துள்ளார்.
இதே போன்று நியூசிலாந்து அணி வீரர்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை கண்டிருக்கிறார்கள். நியூசிலாந்து வீரர் வில் யங், எட்டு இடங்கள் முன்னேறி 14-வது இடத்தையும் பிலிப்ஸ் 12 இடங்கள் முன்னேறி 28 வது இடத்தையும் 11 இடங்கள் முன்னேறி 30 வது இடத்தையும் பிடித்திருக்கிறார்.
இதேபோன்று ரச்சின் ரவீந்தரா 18 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்திருக்கின்றன. ஒரு நாள் போட்டி பந்துவீச்சாளருக்கான பட்டியலில் குல்தீப் யாதவ், தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றார். முதல் 10 இடத்தில் அவர் மட்டுமே இந்திய வீரர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிராஜ் இரண்டு இடங்கள் சரிந்து 12-வது இடத்திலும் ஜடேஜா 13-வது இடத்திலும் சாமி ஒரு இடம் முன்னணி 14-வது இடத்தில் பிடித்துள்ளனர்.