ARTICLE AD BOX
Rohit Sharma vs Pakistan in ICC Champions Trophy : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோசமான சாதனையை வைத்திருக்கும் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அதனை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Rohit Sharma vs Pakistan in ICC Champions Trophy : விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே ரோகித் சர்மாவின் கேப்டன்ஸி மீது பிசிசிஐ அதிருப்தியில் இருக்கும் நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். இதை வைத்து தான் அடுத்த 2027 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா இல்லையா என்பது தெரியவரும்.

கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் 5ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் துபாயில் தொடங்குகிறது. ஏற்கனவே வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அதே முனைப்புடன் இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
Champions Trophy 2025: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் தான் ஹீரோ! யுவராஜ் சிங் கருத்து

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆனால், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தொல்வி அடைந்த பாகிஸ்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் மட்டும் பாகிஸ்தான் தோற்றால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறும். 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெற்ற அணியாக நடப்பு சாம்பியனாக பாகிஸ்தான் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது.

ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான சாதனையை கொண்டுள்ளார். அவர் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு அரைசதம் உள்பட மொத்தமாக 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 91 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் பேட்டிங் சராசரி 36.33. இந்த நிலையில் தான் இன்றைய போட்டியில் அந்த மோசமான சாதனையிலிருந்து மீண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதுவே பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் அவர் 873 ரன்கள் அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா அடித்த அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் 140 ரன்கள். மேலும், 2 சதங்கள், 8 அரைசதங்கள் அடித்துள்ளார். இதில் 78 பவுண்டரிகள், 26 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
IND VS PAK: பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா ரெடி! ரசிகர்கள் குஷி! 2 வீரர்கள் அதிரடி மாற்றம்!