ARTICLE AD BOX
ICC Champion Trophy, India vs Australia | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் அரையிறுதிப் போட்டி நாளை துபாய் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சில தவறுகளை செய்யவே கூடாது. ஏனென்றால் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் செய்த அந்த தவறுகளால் தான் இந்திய அணி தோற்க நேரிட்டது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கனவும் தகர்ந்து போனது. எனவே, இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்பதை இங்கு பார்க்கலாம்.
டிராவிஸ் ஹெட் விக்கெட்
இந்திய அணி ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றதற்கு மிகப்பெரிய காரணம் டிராவிஸ் ஹெட் பேட்டிங் தான். அவர் இந்திய அணிக்கு எதிராக என்றால் மிகவும் சிறப்பாக ஆடக்கூடிய பிளேயர். குறிப்பாக ஐசிசி போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக தரமான பேட்டிங்கை ஆடக்கூடியவர். ஆனால் அவருடைய வீக்னெஸை கண்டுபிடித்து இந்திய அணி அட்டாக் செய்ய வேண்டியது அவசியம். ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவரின் வீக்னெஸ் லைனில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசவே இல்லை. இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஓவர் விக்கெட்டில் வந்து வீசினால் டிராவிஸ் ஹெட் மிகவும் தடுமாறக்கூடியவர். அதேபோல் ஷார்ட்பிட்ச் ஸ்லோயர் பந்தும் அவருக்கு தடுமாற்றதைக் கொடுக்கக்கூடியது. இதை செய்யாமல் விட்டால் அவரின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துவது கடினம்.
வேகப்பந்து வீச்சாளர்கள்
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை வைத்து களம் கண்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த பார்முலா எல்லாம் பலிக்காது. ஏனென்றால் யார் தரமான பந்துவீச்சாளரோ அவரை அடிக்கவே ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் முயற்சிப்பார்கள். ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பும்ரா பந்துவீச்சை சொல்லி வைத்தாற்போல் அட்டாக் செய்தார்கள். அதே பாணியை தான் நாளைய போட்டியிலும் கடைபிடிப்பார்கள். அதனால் ஹர்ஷித் ராணாவை அணிக்குள் கொண்டு வருவது நல்லது.
இந்திய அணியின் பேட்டிங்
இந்திய அணியின் பேட்டிங் பார்ப்பதற்கு சிறப்பாக இருப்பதுபோல தோன்றினாலும் கில் அல்லது விராட் கோலியை அதிகம் நம்பியே இருக்கிறது. ரோகித், கேஎல் ராகுல் ஆகியோர் தரமான பேட்டிங்கை கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். ஸ்ரேயாஸ் எல்லா சூழ்நிலைக்கும் பக்கபலமாக இருப்பார். பின்வரிசையில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா நம்பிக்கை கொடுப்பார்கள். ஆனால் டாப் ஆர்டரில் ரோகித் நல்ல இன்னிங்ஸ் ஆட வேண்டும். இதை செய்ய தவறினால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நாளைய போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
மேலும் படிக்க | Champions Trophy 2025: இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியை எப்போது, எங்கு பார்க்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ