ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் செவ்வாய்க்கிழமை துபாயில் பலப்பரீட்சை நடத்துகிறது. இரண்டு அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், ஆஸ்திரேலியா அணியில் பல ஸ்டார் வீரர்கள் இடம் பெறாதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணி இது போன்ற கட்டங்களில் வீறு கொண்டு எழுந்து விளையாடும் என்பதால் அவர்களை கணிக்கவே முடியாது சூழலில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து பிரபல ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ வெளியிட்ட கருத்தை தற்போது பார்க்கலாம்.

இது குறித்து பேசிய அவர், " 2023 நவம்பர் மாதம் பல இந்தியர்களின் மனதில் இன்னும் மறக்க முடியாத வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த தோல்விக்கு இந்திய அணி தற்போது பழி தீர்க்க வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். இது சாத்தியம் ஆகுமா ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஸ்மித்தின் ஜாதகம் தற்போது பெரிய அளவில் சரியில்லை."
"அவருக்கு ராகு சரியான இடத்தில் இல்லை. இதன் மூலம் அவரால் பெரிய கோப்பையை தற்போது வெல்ல முடியாது. அவருக்கு அந்த ராசியே கிடையாது. ஆனால் டிராவிஸ் ஹேட்டை, ஆஸ்திரேலிய அணி கேப்டனாக நியமித்திருந்தால் இம்முறை ஐசிசி கோப்பையை அவர்கள் வென்றிருக்கலாம். ஆனால் இந்த தவறை ஆஸ்திரேலியா செய்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியிலே கம்மின்ஸ்க்கு தான் கோப்பையை வெல்ல அதிக ராசி உள்ளது."
"ஆனால் அவர் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு தான் ஏற்படுத்தும். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் ராசியை பார்த்தால் அவருடைய ஜாதகத்தில் அனைத்து கோள்களும் அவருக்கு சாதகமாக இருக்கின்றது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும்."
"அது மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அணியில் இருக்கும் மற்ற வீரர்களின் கோள்களும் சாதகமாக இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி அவர்களை நசுக்கி எளிதில் வெற்றியை பெற்று விடும். இந்தியா இறுதிப் போட்டிக்கு கண்டிப்பாக செல்லும்" என்று ஜோதிடர் லோபோ கணித்துள்ளார்.