ARTICLE AD BOX
“History Changed”.. கடைசில அஜித்துக்கும் நாமத்தை போட்ட திரிஷா.. விடாமுயற்சியால் வந்த வினை!!
அதாவது, திரிஷா முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகம் ஆன ‘மௌனம் பேசியதே’ படத்திலே சூர்யாவிற்கு நாமத்தை போட்டு கழட்டி விட்டு செல்லும்படி தான் அவரது கதாபாத்திரம் இருக்கும். அதைத் தொடர்ந்து இவர் நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கொடி’, ’96’ போன்ற படங்களிலும் திரிஷா ஹீரோக்களுக்கு நாமத்தை போட்டு வேறு ஒருவருடன் சென்று விடுவார். ஆனால் அஜித் மட்டும் தான் ‘மங்காத்தா’ படத்தில் திரிஷாவுக்கே நாமத்தை போட்டு விட்டார் என்று அவரது ரசிகர்கள் மீம் போட்டு காலரை தூக்கி விட்டு சுற்றி திரிந்தனர். தற்போது அந்த வரலாற்றை மாற்றி ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா அஜித்திற்கு நாமத்தை போட்டு விட்டு வேறு ஒரு நபரை காதலிப்பார். இதனால் அந்த மீமையே திருப்பி போட்டு ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகின்றனர்.
The post “History Changed”.. கடைசில அஜித்துக்கும் நாமத்தை போட்ட திரிஷா.. விடாமுயற்சியால் வந்த வினை!! appeared first on EnewZ - Tamil.