ARTICLE AD BOX
![BJP WIN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/BJP-WIN.webp)
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கப்பட்ட நிலையில், தொடங்கியதில் இருந்தே ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டது.
எனவே, பாஜக வெற்றி வாகை சூடிவிட்டது என முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தொண்டர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இறுதியாக, 70 தொகுதிகளில் 44 தொகுதியில் பாஜக வெற்றிபெற்று டெல்லியை கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக, ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி 22 தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. 2013 (54 நாட்கள் மட்டும்), 2015 (5 ஆண்டுகள்), 2020 (5 ஆண்டுகள்) என டெல்லியில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி இந்த முறை தோல்வியை சந்தித்தது கட்சியின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியை பிடித்த பாஜக
இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்கிறது. இதற்கு முன்னதாக, கடந்த 1993ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்ததது. பாஜக ஆட்சி காலத்தில் சாகிப் சிங் வர்மா, மதன் லால் குரானா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தனர். அதன்பிறகு, 1998ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
அதன்பிறகு, 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றினால் ஆட்சியில் தொடரமுடியவில்லை. அதன்பிறகு, கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை வென்று கெஜ்ரிவால் ஆட்சி அமைத்தார். அதன்பிறகும், கடந்த 2020ஆம் ஆண்டில் 62 இடங்களைப் பெற்று மீண்டும் அவர் முதலமைச்சர் ஆனார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 27-ஆண்டுகளுக்கு பின் பாஜக வெற்றிபெற்றிருக்கிறது.
பாஜக வெற்றி தொண்டர்கள் கொண்டாட்டம்
பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து தொண்டர்கள் பலரும் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தேர்தலில் வெற்றியை அமோகமாக கொண்டாடி வருகிறார்கள். மேலும், டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி ‘வளர்ச்சியின் வெற்றி’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தற்போதைய முடிவுகள்
டெல்லி சட்டப்பேரவை 70 தொகுதியில் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவைப்படுகிறது. பாஜக தற்போதுவரை 44 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் 4 இடங்களில், முன்னிலை வகித்தும் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.