ARTICLE AD BOX
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை... எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீண்டும் அடாவடி.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நாளை இந்து முன்னணி அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுப்பு. மதுரை மாவட்டத்தில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல்குண்டு வீச்சு. இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர் பெட்ரோல் குண்டை வீசியதாக தகவல்.
10 கோடி ரூபாயில் தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்படும்.... மணப்பாறையில் நடைபெற்ற சாரண, சாரணியர் வைர விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு....
“அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” - வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
“இசிஆரில் பெண்கள் காரை துரத்திய விவகாரத்தில் திமுக மீது பொய் பழி போட்ட எடப்படி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா?” - முக்கிய நபர் அதிமுக பின்புலம் கொண்டவர் என சுட்டிக்காட்டி அமைச்சர் ரகுபதி கேள்வி
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த ஆளுநர் உள்ளிட்டோர் செயல்படுகின்றனர் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஓய்கிறது. வரும் 5ஆம் தேதி வாக்குப்பதிவு.
இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைவதாக சீமான் குற்றச்சாட்டு... தங்களை கண்டு அதிமுக இவ்வளவு அஞ்சும் என நினைக்கவில்லை என்றும் விமர்சனம்.
ஓசூரில் கிரஷர் உரிமையாளர்களுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ். கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் இடையேயான பேச்சில் உடன்பாடு.
நாமக்கல் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் 75 லட்ச ரூபாயை இழந்த லாரி ஓட்டுநர் தற்கொலை. மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்.
பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்... ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
இந்தோனேசியா முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி. முருகனுக்கு அரோகரா எனக் கூறி உரையைத் தொடங்கினார்.
இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு சொந்த ஊரில் பாராட்டு விழா... மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் துரிதமாக நடைபெற்று வருவதாக பேச்சு...
இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு... தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விளக்கம்...
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்... அடுக்குமாடி கட்டடங்கள் தகர்ப்பு... பயங்கரவாத குழுக்களின் நிலைகளை தாக்கியதாக இஸ்ரேல் விளக்கம்...
சூடானில் தொடரும் உள்நாட்டு போர்... சந்தையில் துணை ராணுவப்படையினர் நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழப்பு...
டாடா ஸ்டீல்ஸ் செஸ் மாஸ்டர்ஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி... உலக சாம்பியன் குகேஷை டை- பிரேக்கரில் வீழ்த்தி அசத்தல்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி... 97 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவிய இங்கிலாந்து.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய இளம் படை. இளையோர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நாயகி விருதை பெற்றார் இந்தியாவின் த்ரிஷா கொங்கடி... ஒரு சதம் உட்பட 265 ரன்கள் எடுத்ததுடன் 7 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினார். இளையோர் மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசு என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 போட்டியில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா... டி20 இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டூடியோவில் ரஷ்ய கலைஞர்கள் நடனம்... கலைஞர்களின் நடனத்தை கண்டு ரசித்த இளையராஜா.
திருச்சியில் புத்தகங்களே இல்லாத நூலகம், காவலர்கள் இல்லாத மணிமண்டபம்.... ஆய்வுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிருப்தி
ஈரோட்டில் பெரியார் சிலைக்கு கீழே நின்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்... வாக்காளர்கள் பணம் பெறக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த விநோத முயற்சி.
சென்னை செம்மொழிப் பூங்காவில் மாபெரும் ஓவிய கண்காட்சி... 500க்கும் மேற்பட்ட கலைஞர்களின் படைப்புகள் காட்சிக்கு வைப்பு.
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் கடல் சீற்றம்... அலைகள் குறைந்து கடல் உள்வாங்கி காணப்படும் நிலையில் பக்தர்களை அப்புறப்படுத்திய பணியாளர்கள்.
தூத்துக்குடி வல்லநாட்டில் வீட்டை தனியார் நிறுவனம் ஜப்தி செய்ய வந்ததால் கூலித் தொழிலாளி உயிரிழந்த விவகாரம்... பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்குகிறது தனியார் நிதி நிறுவனம்.
வக்ஃப் வாரிய திருத்த மசோதா அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்... நாடாளுமன்றக் கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தாக்கல் செய்கிறார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.
“16 எம்.பி,க்களை வைத்துக் கொண்டும் ஆந்திராவுக்கு எதையும் பெற முடியவில்லை...” - தெலுங்குதேசம் கட்சி மீது எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சாடல்.
குஜராத்தில் 130 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு... 20க்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை.