Headlines | டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு முதல் உக்ரைன் அதிபரை விமர்சித்த ட்ரம்ப் வரை!

6 days ago
ARTICLE AD BOX
Published on: 
20 Feb 2025, 1:44 am
  • நீண்ட இழுபறிக்கு பிறகு டெல்லி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் ரேகா குப்தா. முதன்முறை எம்.எல்.ஏ.வான ரேகா, டெல்லியின் நான்காவது பெண் முதல்வராகிறார்.

  • டெல்லியின் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் பர்வேஷ் வர்மா. இவர், புதுடெல்லி தொகுதியில் களமிறங்கி அர்விந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தவர்.

  • டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது முதல்வர் பதவியேற்பு விழா. முதல்வர் ரேகா குப்தாவுடன் 5 அமைச்சர்கள் பதவியேற்கவிருப்பதாக தகவல்.

  • தனக்கான பணியை பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ள இருகப்பதாக ரேகா குப்தா பேட்டி. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே தனது லட்சியம் என்றும் உறுதி.

  • சாம்பியன் டிராபி தொடரை இன்று தொடங்குகிறது இந்தியா. துபாயில் நடைபெறும் போட்டியில் வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை.

  • பார்முலா 4 கார் பந்தயம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மனு மீது தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.

  • திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்..

  • 2026இல் மாற்றம் இல்லை என்றால் தமிழகத்தில் எப்போதும் மாற்றம் இல்லை என்று கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.

  • தமிழ்நாட்டில் ஒரேநாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

  • மத்திய அரசுக்கு அவப்பெயர் வராமல் இருக்க மடைமாற்றும் அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ரகுபதி பதிலடி.

  • அதிமுக ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை தொண்டர்கள் உணர்ந்துள்ளனர் என கோவையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி.

  • தமிழகத்துக்கு மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்காத நிலையில் மாநில அரசே அதற்கான பணிகளை மேற்கொள்ளும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி.

  • தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்றிடக் கோரிக்கை. டெல்லியில் தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரை சந்தித்து பல்வேறு மாவட்ட தலைவர்கள் புகார் மனு.

  • புதுக்கோட்டையில் பாஜக ஆர்ப்பட்டத்தின்போது காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு. "என்னை ஏன் அடிக்கிறீர்கள்" என்று டிஎஸ்பி, பாஜகவினருடன் வாக்குவாதம்.

  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது. இலங்கை கடற்படையால் தொடரும் கைது நடவடிக்கை.

  • செய்யாறு அருகே அங்கன்வாடியின் மேற்கூரை கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்தில் மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

  • சிங்கம்புணரி அருகே மலைப்பாதையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வகையில் பழுதான பேருந்தை மீண்டும் மீண்டும் அனுப்புவதா என பெண் பயணி கேள்வி.

  • பள்ளி மாணவிக்காக புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை. அரியலூரில் 8ஆம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட அமைச்சர்.

  • பழனி முருகன் கோயிலில் அலகு குத்தி பறவைக் காவடி எடுத்த சசிகலா ஆதரவாளர். அதிமுக ஒன்றிணைய வேண்டி வழிபாடு.

  • வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலங்களை விலைக்கு வாங்க உத்தராகண்ட் அரசு தடை. புதிய சட்டமசோதாவிற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்..

  • இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல். பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் 10 லட்சம் கையெழுத்து பெற திட்டம்.

  • சட்டவிரோதமாக இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய உதவும் போலி ஏஜெண்ட்கள். பஞ்சாப்பைச் சேர்ந்த 2 போலி ஏஜெண்ட்கள் கைது; பலர் மீது வழக்குப்பதிவு.

  • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என விமர்சித்த அமெரிக்கா அதிபர் ட்ரம்ப். அதிபர் பதவியில் ஜெலன்ஸ்கி தொடர்ந்தால், உக்ரைன் என்ற நாடு மிஞ்சாது எனவும் எச்சரிக்கை..

  • தோழமை நாடுகளின் ஒற்றுமையே உக்ரைன் நம்பியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு. உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப் விமர்சித்திருந்த நிலையில் பதில்.

  • உக்ரைனுடனான பேச்சுவார்த்தையை ரஷ்யா ஒருபோதும் புறக்கணித்தது இல்லை. பேச்சுவார்த்தையில் இருந்து உக்ரைன் விலக்கப்படாது என்றும் புடின் உறுதி.

  • இங்கிலாந்தில் சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம். அதன் அருகே வசிக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி வெளியேற்றம்.

  • வெண் பஞ்சு குவியல்களாக காட்சியளிக்கும் ஜப்பான் நகரம். கொட்டும் பனிச் சாரலால் கடும் குளிர், மக்கள் அவதி.

  • மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு 2ஆவது வெற்றி. லீக் ஆட்டத்தில் யு.பி. வாரியர்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை வீரர் மகீஷ் தீக்சனா முதலிடம். பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடம் பிடித்தார்.

  • ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெற்றார் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி. மகனுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அணிக்கு திரும்புகிறார்.

  • இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவி சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது சரியான முடிவுதான். சிறந்த கிளாசான வீரர் என்பதை தரவரிசையே காட்டுவதாகவும் கேப்டன் ரோகித் சர்மா கருத்து.

  • தேசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு. 157 வீரர், வீராங்கனைகளுக்கு சுமார் நான்கரை கோடி ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

  • குழந்தை பருவத்தை போன்ற வாழ்வை வாழ விருப்பப்படுவதாக எம்.எஸ். தோனி பேச்சு. கிரிக்கெட் தனது வாழ்வில் எப்போதும் இருக்கும் என்றும் உறுதி.

Read Entire Article