ARTICLE AD BOX
ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் காருக்குள் வைத்து பிரபல ரவுடி ஜான் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்... தடுக்க முயன்ற மனைவிக்கு படுகாயம், தப்பிச்சென்ற 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை.
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை.. காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது நடவடிக்கை...
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலையில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அரசு அனுமதிக்காது எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்றும் காவல்நிலையங்களை திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை என அண்ணாமலை விமர்சனம்...
பழனி முருகன் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு... திருச்செந்தூர், ராமேஸ்வரத்தை தொடர்ந்து பழனியில் ஏற்பட்ட துயரம்...
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மனுத்தாக்கல்...
மஞ்சள் நிற ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு இனி மாதம் ஆயிரம் ரூபாய்... புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சந்திப்பு.... செயற்கை நுண்ணறிவு, வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக பில் கேட்ஸ் பதிவு....
பஞ்சாப் - ஹரியானா எல்லையில் மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளின் கூடாரங்கள் அகற்றம்... விவசாயத் தலைவர்களையும் கைது செய்து காவல் துறை நடவடிக்கை...
கடைசி நேரத்தில் ரத்தான ரயில்வே தேர்வால் தெலங்கானா சென்ற தமிழக இளைஞர்கள் அதிர்ச்சி.... நிதிச் சுமைக்கும், கடுமையான அலைச்சலுக்கும் ஆளாகி உள்ளதாக குற்றச்சாட்டு...
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்... இந்திய கடற்படை மீதான குற்றச்சாட்டை வைகோ திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், தொலைப்பேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர்.... ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்த முயற்சி சரியான பாதையில் செல்வதாக ட்ரம்ப் கருத்து...