HCL வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 22ம் தேதி இண்டர்வியூ.. சென்னை அம்பத்தூரில் பணி நியமனம்

4 days ago
ARTICLE AD BOX

HCL வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 22ம் தேதி இண்டர்வியூ.. சென்னை அம்பத்தூரில் பணி நியமனம்

Jobs
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் பிப்ரவரி 22ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த இண்டர்வியூவில் யாரெல்லாம் பங்கேற்கலாம்? என்பது பற்றிய விவரம் வருமாறு:

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளுக்கான சில முக்கிய சேவைகளையும் வழங்கி வருகிறது.

it jobs jobs job

தமிழகத்தை பொறுத்தவரை எச்சிஎல் நிறுவனம் என்பது சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து Experienced Voice for Banking Sector பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர்.

வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. ஐடி நிறுவனம் சூப்பர் வாய்ப்பு
வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் போக வேண்டாம்.. ஐடி நிறுவனம் சூப்பர் வாய்ப்பு

இது கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும். Voice Process பணிக்கு குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், மல்டி டாஸ்கிங் திறமை இருக்க வேண்டும். அதேபோல் ரோட்டேஷனல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 22ம் தேதி மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.

டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. பிப்ரவரி 20 - 21 தேதியில் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை
டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. பிப்ரவரி 20 - 21 தேதியில் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்லும்போதும் தற்போது முந்தைய நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்துக்கான ஆஃபர் லெட்டர், சம்பள ரசீது, ரிலிவிங் கடிதம் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.

சென்னை + கோவையில் இண்டர்வியூ.. பிப்ரவரி 22ம் தேதியை மறக்காதீங்க.. அழைக்கும் Cognizant
சென்னை + கோவையில் இண்டர்வியூ.. பிப்ரவரி 22ம் தேதியை மறக்காதீங்க.. அழைக்கும் Cognizant

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தில் இருந்து Cab வசதி உள்ளது. வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும் இந்த Cab வசதி இருக்கும். அதேபோல் வாரம் 5 நாட்கள் பணி என்பது இருக்கும். உடனடியாக பணிக்கு சேர தயாராக இருப்போருக்கு வாய்ப்பு என்பது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
English summary
HCL jobs 2025: HCL hiring for experienced voice for banking sector on February 22 in Chennai. Candidates who has experienced with 1 to 3 years in Voice Process will attend this interview. Selected candidates will be appointed at Ambattur in Chennai.
Read Entire Article