HCL வேலைவாய்ப்பு.. இன்று முதல் 3 நாள் நடக்கும் இண்டர்வியூ.. சென்னையில் பணி நியமனம்

9 hours ago
ARTICLE AD BOX

HCL வேலைவாய்ப்பு.. இன்று முதல் 3 நாள் நடக்கும் இண்டர்வியூ.. சென்னையில் பணி நியமனம்

Jobs
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் HCL ஐடி நிறுவனத்தில் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக எச்சிஎல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: எச்சிஎல் நிறுவனத்தில் Customer Service Representative பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it jobs job jobs

இது ஹேல்த்கேர் வாய்ஸ் இன் பவுண்ட் மற்றும் அவுட் பவுண்ட் (Healthcare Voice Inbound & Outbound) பணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பணியை விரும்புவோருக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Inbound & Outbound Calls, ஹெல்த்ஹேர் இன்டர்நேஷனல் வாய்ஸ் சப்போர்ட் தெரிந்திருக்க வேண்டும். ஆர் சி எம், டெனியல் மேனேஜ்மென்ட், பேயர் எக்ஸ்பிரியன்ஸ் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.

லட்சத்தில் சம்பளம்.. Cognizant-யில் சென்னை, கோவையில் பணி.. நாளை கடைசி நாள்
லட்சத்தில் சம்பளம்.. Cognizant-யில் சென்னை, கோவையில் பணி.. நாளை கடைசி நாள்

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி என்பது இருக்கும். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் பயிற்சி வழங்கப்படும். எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட் ஷிப்ட்டில் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. சென்னை + கோவை உள்பட 10 இடங்களில் பணி! அழைக்கும் ஐடி நிறுவனம்
வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. சென்னை + கோவை உள்பட 10 இடங்களில் பணி! அழைக்கும் ஐடி நிறுவனம்

பணிக்கான இண்டர்வியூ என்பது மார்ச் 20 (இன்று) முதல் மார்ச் 22ம் தேதி வரை 3 நாட்கள் தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Sholinganallur ELCOT Campus, Tower 4, Chennai - 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு Face To Face முறையில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்லும்போது லேப்டாப் என்பது அனுமதிக்கப்படாது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
English summary
HCL Jobs 2025: HCL hiring for Fresher Healthcar Voice inbound and outbound like customer service representative role in Chennai. Interview to be held in Chennai from March 20 to March 22.
Read Entire Article