HBD Nirosha: முதல் படத்திலேயே பிகினி தரிசனம்.. யார்ரா இந்த பொண்ணு என இளசுகளின் மனம் கவர வைத்த நாயகி

2 hours ago
ARTICLE AD BOX

எதிர்ப்பை மீறி சினிமா என்ட்ரி

மறைந்த நடிகவேள் எம்.ஆர். ராதா இளையமகள், தமிழ் சினிமாவின் முன்னாள் ஹீரோயினும், மூத்த நடிகையுமான ராதிகாவின் தங்கை என பக்கா சினிமா பேக்ரவுண்ட் கொண்டவரான நிரோஷா, மூன்று தனது தந்தை நடித்த தாலி பெண்ணுக்கு வேலி படத்தில் அவரது ரீல் மகளாக நடித்திருந்தார். அதன் பின்னர் டீன் ஏஜ் வயதில் அவரை தனது படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க இயக்குநர் மணிரத்னம் கேட்டதாக கூறப்படும் நிலையில், நடிப்பின் மீது ஆர்வம் தொற்றிக்கொண்ட நிரோஷா நடிக்கவும் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் வீட்டில் அதற்கு எதிர்ப்பு கிளம்ப, அக்கா ராதிகா சப்போர்ட் செய்ய அக்னி நட்சத்திரம் படத்தில் ஹீரோயின் ஆனார்.

பூங்காவனம் என்ற இளையராஜாவின் மெலடி பாடலில் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் குளிப்பது தான் நிரோஷாவின் சினிமா என்ட்ரி காட்சியாக அமைந்தது. அப்போது இளசுகளை யார்ரா இந்த பொண்ணு என உச் கொட்ட வைத்தவராக திகழ்ந்தார். படத்தில் மாடர்ன் பெண்ணாக தோன்றி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய நிரோஷா இளைஞர்களை மட்டுமல்லாமல் பாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சனையே ரசிக்க வைத்துள்ளார். ராதிகாவின் தங்கை தான் இவர் என தெரியாமல் நிரோஷாவின் நடிப்பு தன்னை இம்ரஸ் செய்தது பற்றி அமிதாப், நடிகை ராதிகாவிடமே பேசியுள்ளாராம்.

இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது படமாக கமலுக்கு ஜோடியாக சூரசம்ஹாரம் படத்தில் கவர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் கமலுடன் லிப் லாக், நெருக்கமான காட்சிகள் என தாராளம் காட்டி சூடேற்றியிருப்பார். அப்படியே இதற்கு நேர் எதிராக தனது அடுத்தபடமான சொந்தூர பூவே படத்தில் ராம்கி ஜோடியாக கிராமத்து பெண்ணாக நடிப்பில் மிளிர்ந்திருப்பார். சினிமாவில் நடிக்க அறிமுகமான ஆண்டிலேயே நான்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

கவர்ச்சி, ஹோம்லி கதாபாத்திரம் என தமிழில் கலக்கிய நிரோஷாவின் தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் பரவ அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. அந்த மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிரோஷா, தனது அற்புத நடிப்பாற்றலால் வெளுத்து வாங்கினார். அக்கா ராதிகாவுக்கே போட்டியாக அமைந்தார். மலையாளத்திலும் வாய்பை பெற்ற நிரோஷா அங்கும் சில படங்களில் நடித்தார்.

தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக உருவெடுத்த நிரோஷா மிக குறுகிய காலகட்டத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார். இவர் நடிக்க படங்களும் ஹிட்டாகி நல்ல வரவேற்பையும் பெற்ற நிலையில் ராசியான நடிகை என்ற பெயரெடுத்தார்.

காதல், ரகசிய திருமணமும்

தமிழில் தொடர்ந்து ராம்கியுடன் நடித்து வந்த நிரோஷாவுக்கு அவர் மீது காதல் பற்றிக்கொண்டது. படப்பிடிப்பின்போது ரயிலில் இருந்து தவறி கீழே விழ இருந்த நிரோஷாவை நிஜ ஹீரோ போல் ராம்கி காப்பாற்றிய சம்பவம் தான் இருவருக்கும் காதல் பற்றிக்கொண்ட தருணமாக அமைந்தது. நிரோஷாவின் காதலுக்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ராம்கியுடன் ஜோடியாக நடிப்பதற்கு கூட தடை போடும் அளவுக்கு நிரோஷா தடுக்கப்பட்டார். இதன் விளைவாகவே இணைந்த கைகள் படத்தில் முதலில் நிரோஷா ஜோடியாக ராம்கி நடிக்க வேண்டி இருந்த நிலையில், ராதிகா ஹீரோவை மாற்ற சொன்னதாக கூறப்படும் நிலையில், பின்னர் நிரோஷாவுக்கு ஜோடியாக அருண் பாண்டியன் மாற்றப்பட்டாரம்.

வீட்டின் எதிர்ப்ப்பையும் மீறி ராம்கியாக ரகிசியமாக திருமணம் செய்து கொண்ட நிரோஷா, வீட்டை விட்டு வெளியேறி அவருடன் சில காலம் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். முன்னணி நடிகையாக இருந்தபோதிலும், திருமணத்துக்கு பின்னர் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தார். கடினமான காலகட்டத்தை கடந்த பின்னர் இவர்களின் திருமண உறவை வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

சீரியலில் கம்பேக்

திருமணத்துக்கு பின் தெலுங்கு சீரியலில் நடித்த நிரோஷா தமிழில் நந்தினி என்ற சீரியலில் கம்பேக் கொடுத்தார். இருப்பினும் சன்டிவியில் பிரபலமான சின்ன பாப்பா பெரியா பாப்பா காமெடி தொடர் தான் இவரை மீண்டும் அடையாளப்படுத்தியது. அத்துடன் சினிமா வாய்ப்புகளும் மீண்டும் வரத் தொடங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிப்பில் முத்திரை பதித்தார்.

அதேபோல் சீரியல்களிலும் விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் நிரோஷா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சாப்டர் 2, பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்து வருகிறார்.

சிறந்த நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருது சிறப்பு ஜூரி விருதை வென்றுள்ளார் நிரோஷா, 90ஸ் காலகட்டத்தில் பல இளசுகளின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த நிரோஷாவின் பிறந்தநாள் இன்று.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article