ARTICLE AD BOX
கோபி செய்த வேலையால் இனியா அசிங்கபட்டுள்ளர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் கொஞ்சம் யோசிச்சு பேசி இருக்கலாம் என்னால எங்க அம்மாவையும் பசங்களையும் விட்டுட்டு வர முடியாது என்றும் மயுவும் நீயும் முக்கியம்தான் நீங்களும் போக கூடாது நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு படுத்து கொள்கிறார். மறுபக்கம் மயுவிற்கு பாக்கியா கதை சொல்லிக் கொண்டிருக்க மயு எதையும் யோசித்துக் கொண்டிருக்கிற என்னாச்சும்மா என்று கேட்க நான் இந்த வீட்டை விட்டுப் போய் ஆகணுமா என்று கேட்கிறார். ஆமாம் மயூ நீ உன்னோட அம்மா அப்பா என்ன சந்தோஷமா ஒரு வாழ்க்கை வாழ்ந்தீங்க இல்ல அது மாதிரி வாழனும் இங்க உனக்கு சில கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கலாம் நீ ரொம்ப திறமையான பொண்ணு மத்தவங்கள சந்தோஷமா வச்சுக்கணும்னு நினைக்கிறேன் எங்க உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்த விஷயத்தை நீ இங்கேயே மறந்திடு நீ அங்க போய் சந்தோஷமா இருக்கணும் என்று சொல்ல இப்போ உங்கள பாக்க முடியாதா என்று கேட்கிறார் எப்ப வேணா நீ என்னை வந்து இங்க பார்க்கலாம் இல்லன்னா எனக்கு பாக்கணும்னு தோணுச்சுன்னா நான் வந்து பார்க்கிறேன் என்று அட்வைஸ் செய்து படுக்க வைக்கிறார்.
மறுநாள் காலையில் இனியா டான்ஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க எல்லாமே எடுத்து வச்சுட்டேனா என்று யோசிக்கிறார் ஜெனி நீ எல்லாத்தையும் எடுத்துட்டு நான் பார்த்தேன் என்று சொல்ல இப்படித்தான் போன வாட்டி நடந்துச்சு ஆனா ரெண்டு மூணு பொருள் மிஸ் ஆயிடுச்சு என்று சொல்லுகிறார் செழியன் அதுதான் உடனே வாங்கிட்டோள்ள விடு என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க கோபி பொக்கே உடன் வருகிறார். இனியாவிற்கு வாழ்த்து சொல்லிவிட பைனல் சேர்க்க வந்து பார்த்துட்டு அப்புறம் இங்கிருந்து போயிடுவீங்களா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா உன் கூடவே தான் இருப்பேன் என்று சொல்லுகிறார். எனக்கு டான்ஸ் ஸ்டெப் எல்லாம் மறக்கிற மாதிரி இருக்கு என்று சொல்ல அதெல்லாம் உனக்கு ஒன்னும் மறக்காது தைரியமா இரு என்று பாக்யா சொல்லுகிறார். கிச்சனில் ராதிகா மற்றும் மயூ இருவரும் காபி குடித்துக்கொண்டு இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கோபி அங்கிருந்து ராதிகாவிடம் வந்து நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் காம்பெடிஷன் வாங்க என்று கூப்பிடுகிறார் ஆனால் மயூ எனக்கு எக்ஸாம் இருக்கு டாடி என்னால லீவ் போட முடியாது என்று சொல்ல பிறகு ராதிகாவை கூப்பிடுகிறார் ராதிகா வர மறுக்க இனியா ஜெயிக்கும் நோன்றது பார்க்க உனக்கு ஆசை இல்லையா என்று கேட்க அதெல்லாம் ஆசை இல்லாம இருக்குமா? என்று சொல்கிறார் அப்போ நீ கண்டிப்பா வரணும் வேற வழி கிடையாது வந்து ஆகணும் என்று சொல்லி ரெடியாக சொல்லுகிறார். பிறகு ராதிகாவும் வர சம்மதிக்க இனியா கோபியை கூப்பிட்டு இவங்களை எதுக்கு வர சொல்றீங்க அங்கு என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க நான் என்னன்னு சொல்றது என்று கேட்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார்.
ஈஸ்வரி அவதான் வரமாட்டேன்னு சொல்ற இல்ல அவளை எதற்கு வற்புறுத்தி கூப்பிடுற என்று கேட்க அதற்கு கோபி வீடு விஷயம் பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்று சொல்லுகிறார். உடனே இனியா விட்டுட்டு போயிட மாட்டீங்களா என்று கேட்க கண்டிப்பா போக மாட்டேன் என்று சொல்லுகிறார். நான் ராதிகா கிட்ட பேசி இந்த வீட்ல இருக்கறதுக்கு சம்மதம் வாங்கிட்டு கவலைப்படாதே என்று சொல்லி எல்லாரையும் ரெடியாக அனுப்பி வைக்கிறார்.
எல்லோரும் டான்ஸ் ஆடும் இடத்திற்கு வந்து கலந்து கொண்டிருக்க ஈஸ்வரி பக்கத்தில் ராதிகா இருப்பதால் இருவரும் முறைத்துக் கொண்டே இருக்கின்றனர். பாக்யாவும் சரியான நேரத்தில் வர அவரும் வந்து உட்கார்ந்து விடுகிறார். கோபி ராதிகாவை வேறு சீட்டில் உட்கார வைத்து ஈஸ்வரி பக்கத்தில் கோபி வருகிறார்.
பிறகு போட்டியாளர்களை வரவைத்து நீங்க இவ்வளவு தூரம் வந்ததுக்கு யார் காரணம் என்ற கேள்வி கேட்க இனியா என்ன சொல்லுகிறார்?கோபி என்ன பண்ணப் போகிறார்?அதற்கு இனியா ரியாக்ஷன் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
The post கோபி செய்த விஷயம், அசிங்கப்படும் இனியா,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.