ARTICLE AD BOX

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மிகவும் அவசியமாக உள்ளது. பொதுமக்கள் இன்றைய சூழ்நிலையில் GPAY , PHONEPE , PAYTM போன்ற செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இது போன்ற ஆன்லைன் பண பரிமாற்ற செயலிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் மின்சார கட்டணம், எரிவாயு கட்டணம் போன்றவற்றை Gpay மூலம் செலுத்தும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிப்பதாக அறிவித்துள்ளது.
இந்த வகையில் PHONEPE, PAYTM போன்ற சில சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என GPAY அறிவித்துள்ளது. GPAY ஏற்கனவே ரீசார்ஜ் செய்வதற்கு ரூபாய் 3சேவை கட்டணம் வசூலித்து வரும் நிலையில், தற்போது மின்சார கட்டணம், எரிவாயு கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அதாவது கட்டணத் தொகையில் 0.5% முதல் 1% வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் ரூபாய் 23.48 லட்சம் கோடி UPI பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் Gpay-யில் மட்டும் ரூபாய் 8.26 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.