ARTICLE AD BOX
Google-க்கும் அடிசறுக்கும்.. பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும் Pixel போன்.. எந்த மாடல்?
வழக்கமாக "விலை போகாத கத்திரிக்காய்" பிரிவில் வரும் ஸ்மார்ட்போன்கள் தான் பாதிக்கு பாதி என்கிற ஆபர் விலையில் விற்பனை செய்யப்படும். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன் ஒன்று "கிட்டத்தட்ட" பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கிறது.
ஒருவேளை இதற்கு பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் அறிமுகம் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இது ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் ஆன ஐபோன் 16இ மாடலை விட சுமார் ரூ.16,000 மலிவான விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன் ஒன்று 46% தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதென்ன என்ன மாடல்? அது கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7) மாடலாகும். தற்போது பிளிப்கார்ட் வழியாக, இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் +128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.59,999 க்கு பதிலாக 46% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது.
அதாவது பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.28,000 விலை குறைப்பை பெற்றுள்ளது. கூடுதலாக எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கும். கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் மீதான இந்த ஆபர் க்ரீன், பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய அனைத்து 3 கலர் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கிறது.
பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷன் ரூ.43,000 க்கும், 256ஜிபி வேரியண்ட் ரூ.51,800 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது ரூ.59,900 க்கு வாங்க கிடைக்கும் ஐபோன் 16இ மாடலை விட மலிவானதாக இருக்கும்.
கூகுள் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் விலை விவரங்கள்: பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ,79,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது பியோனி, போர்செலின், அப்சிடியன் மற்றும் வின்டர்க்ரீன் கலர்களில் வாங்க கிடைக்கும்
பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக உள்ள பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இரண்டு ப்ரோ மாடல்களுமே ஹெசல், போர்செலின், ரோஸ் குவார்ட்ஸ் மற்றும் அப்சிடியன் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்.
வரவிருக்கும் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? யுஎஸ் எப்சிசி (US FCC) வலைத்தளம் வழியாக கிடைத்த விவரங்களின்படி, பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது பிக்சல் 9 சீரீஸில் உள்ள மற்ற மாடல்களை போலல்லாமல் ரெய்ஸ்டு கேமரா மாட்யூல் (Raised Camera Module) இல்லாத டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.
பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஐரிஸ், அப்சிடியன், பியோனி மற்றும் போர்சேலைன் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து லீக் ஆன ஒரு போஸ்டரில், ஸ்மார்ட்போனின் மீது நீர்துளிகள் காணப்படுகிறது. இது அதன் ஐபி ரேட்டிங்கை குறிப்பதாக தெரிகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை (IP68 Rating) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கூகுள் ஜெமினி ஏஐ ஆதரவுடன் (Google Gemini AI Support) வரும் என்றும், கூகிளின் டென்சர் ஜி4 சிப்பால் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை 48 மெகாபிக்சல் பிரைமரி ரியர் கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 உடன் வரலாம். கடைசியாக 23W (வயர்டு) மற்றும் 7.5W (வயர்லெஸ்) சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,100mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.