Google Pay-ல் பணம் அனுப்புறீங்களா..? இனி இதற்கெல்லாம் கட்டணம் உண்டு! - எவ்வளவு தெரியுமா?!

4 days ago
ARTICLE AD BOX

பணம், காசு என்பதை மாற்றி எல்லாமே 'ஆன்லைன் பேமெண்ட்' என்ற டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியதில் கூகுள் பே-விற்கு முக்கிய பங்கு உண்டு.

இந்தியாவிலும் பெரும்பாலான மக்கள் Google Pay-ஐ ஆன்லைன் கட்டண ஆப்பாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும், கூகுள் பேயில் ரூ.8.26 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.

ஆரம்பத்தில் பரிவர்த்தனைகளுக்கென எந்தவித கட்டணத்தையும் கூகுள்பே விதிக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு, கூகுள்பேவை பயன்படுத்தி மேற்கொள்ளும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு ரூ.3 கட்டணத்தை வசதிக்கான கட்டணமாக விதித்தது.

இனி 'இதற்கு' எல்லாம் கட்டணம் உண்டு!

இனி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் கேஸ் சிலிண்டர் பில், மின்சார பில் போன்ற பயன்பாடு சம்பந்தமான பில்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூகுள் பே அறிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தும் தொகையில் 0.5 சதவிகிதத்தில் இருந்து 1 சதவிகிதம் பிளஸ் ஜி.எஸ்.டி தொகை கூகுள் பேயின் வசதிக்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்படி வசூலிக்கப்படும் கட்டணம் கூகுள் பேயில் நடக்கும் பரிவர்த்தனைக்கான பிராசஸ் கட்டணமாக வாங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Google Pay Sachet Loan: சிறு வியாபாரிகள் எளிதாக கடன் பெறலாம்..! வழிமுறை என்ன?
Read Entire Article