ARTICLE AD BOX
Good Bad Ugly: ஓவர் ஆட்டம் போட்ட தனுஷ் ரசிகர்கள்.. GBU அப்டேட் வந்ததும் அடித்து ஆடும் அஜித் ரசிகர்கள்
சென்னை: அஜித் குமார் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தில் பிரசன்னா, அர்ஜுன் தாஸ், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தில் வேறு யாரெல்லாம் நடித்துள்ளார்கள் என்ற தகவலை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் உறுதி செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் இருப்பதுடன், தனுஷ் ரசிகளை கலாய்த்தும் வருகிறார்கள்.
அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை நேர்த்தி என அனைத்தும் பாராட்டும் விதமாக இருந்தாலும், படத்தில் அஜித்திற்கு மாஸான காட்சிகள் என எதுவும் இல்லை. இதனால் அஜித் ரசிகர்கள் பலருக்குமே இந்த படம் பிடிக்கவில்லை. இப்படி இருக்கும்போது, படத்தின் வசூலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் அஜித் படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் என நினைத்துக் கொண்டு இருக்கையில், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் குறித்து தயாரிப்பு நிறுவனம் வாய் திறக்கவில்லை.

இப்படி இருக்கும்போது, விடாமுயற்சி படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸின்போது எதிரொலிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும்போது, குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் என்ற தகவலை ஏற்கனவே படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. விடாமுயற்சி வசூல் ரீதியாக சரியாக போகாத காரணத்தால், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது.
தனுஷ் ரசிகர்கள்: இப்படியான நிலையில், இந்த சந்தேகத்தை இணையத்தில் பேசுபொருளாக மாற்றி, அஜித் குறித்து கடும் விமர்சனங்களை தனுஷ் ரசிகர்கள் முன் வைத்து வந்தார்கள். அதற்கு காரணம், தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படமும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கம்பு சுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது, குட் பேட் அக்லி டீம் பயந்து விட்டார்கள், அதனால்தான் ரிலீஸ் தேதியை மாற்றுவது குறித்து யோசித்துக் கொண்டு உள்ளார்கள் என பேசி வந்தார்கள்.

பதிலடி: ஆனால், குட் பேட் அக்லி டீம் கொடுத்துள்ள அப்டேட்டில் கெத்தாக, "See You On April 10th Maamey" என தெரிவித்துள்ளார்கள் . இந்த அறிவிப்புக்காக காத்துக் கொண்டு இருந்த அஜித் ரசிகர்கள் இணையத்தை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள் எனக் கூறலாம். மேலும் கம்பு சுத்திக் கொண்டு இருந்த சில தனுஷ் ரசிகர்களையும், பதிலுக்கு வெச்சு செய்து வருகிறார்கள். குறிப்பாக மாஸான காட்சிகள் எல்லாம் வேண்டாம் என விடாமுயற்சி படத்தில் அஜித் சொன்னதால் படம் அப்படி உருவாக்கப்பட்டது.

கிங்: அதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள், 'அஜித் கொஞ்சம் இறங்கி வந்தால் அவரை கிங் ஆஃப் ஓப்பனிங் என்பதையே மறந்துடுவாங்க போல ' எனவும் கூறி பதிலடி கொடுத்து வருகிறார்கள். குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் உறுதி என்ற அறிவிப்பு வந்ததும், தனுஷ் ரசிகர்கள் பலரும், இட்லி கடை படத்திற்கு தியேட்டர் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் எந்த அளவிற்கு படத்திற்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்ற கேள்விகளோடு உலா வருகிறார்கள்.
