Gold Rate Today: 2 நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.. 67 ஆயிரத்தை நோக்கி 'விறுவிறு’வென ஏறுது!

10 hours ago
ARTICLE AD BOX

Gold Rate Today: 2 நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.. 67 ஆயிரத்தை நோக்கி 'விறுவிறு’வென ஏறுது!

Gold Rate
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூபாய் 640 உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா? அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கம் விலை பெரிய அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold price Gold

ஜனவரி 1 ஆம் தேதி தங்கம் விலை 57 ஆயிரம்

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வருகிறது தங்கம் விலை.

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த மார்ச் 13 ஆம் தேதி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதற்கு முந்தைய நாளில் 22 காரட் தங்கம் மார்ச் ஒரு கிராம் ரூ.8,065, ஒரு சவரன் ரூ.64,520 என விற்கப்பட்ட நிலையில், மார்ச் 13 ஆம் தேதி கிராமுக்கு ரூ.55 என சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் தங்கம் ரூ.8,120 ஆகவும் ஒரு சவரன் ரூ.64,960 ஆகவும் உயர்ந்தது.

தாறுமாறாக எகிறும் தங்கம் விலை

மார்ச் 14 ஆம் தேதி காலை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 8,230 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக 65,840 ரூபாய்க்கு விற்பனையானது. அதே நாளில் மதியம் மீண்டும் தங்கம் கிராமுக்கு மேலும் 70 ரூபாய் அதிகரித்து, 8,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, எப்போதும் இல்லாத வகையில், 66,400 ரூபாய்க்கு விற்பனையானது. இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 1,440 உயர்ந்தது.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,220 ஆகவும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,760 ஆகவும் விற்பனை ஆனது. அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை ஆனது.

தொடர் விலை உயர்வு

அதன் பிறகு மார்ச் 16 ஆம் தேதி, தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8,220 ஆகவும், ஒரு சவரன் ரூ.65,760 ஆகவும் விற்பனை ஆனது. மார்ச் 17 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ஒரு சவரன் ரூபாய் 65,680க்கு விற்பனை ஆனது.

மார்ச் 18 மீண்டும் விலை ரூபாய் 320 அதிகரித்தது. சென்னையில் நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 66,000-க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 8,250-க்கு விற்பனையானது.

மார்ச் 19 ஆம் தேதியான நேற்று மீண்டும் தங்கம் விலை ரூபாய் 320 அதிகரித்தது. சென்னையில் நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 66,320-க்கு விற்பனையானது. அதேபோல் கிராமுக்கு ரூ 40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 8,290-க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்?

அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6840-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,720-க்கும், விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூபாய் 640 உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா? அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

20.03.2025 (இன்று) - ?
19.03.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.66,320
18.03.2025 ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025 ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025 ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025 ஒரு சவரன் ரூ.65,760
14.03.2025 (பிற்பகல்) ஒரு சவரன் ரூ.66,400
14.03.2025 (காலை) ஒரு சவரன் ரூ.65,840
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 (ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025 (மதியம்)- ஒரு சவரன் ரூ.64,480
06.03.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.64,160
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520

More From
Prev
Next
English summary
With gold prices having risen by Rs 640 in the last 2 days, there is an expectation among jewelry lovers whether the price of gold will continue to increase or decrease today.
Read Entire Article