ஐபிஎல் 2025: 17 சீசன்களாக நடுவர்; இந்த முறை புதிய அவதாரம்!

13 hours ago
ARTICLE AD BOX

கடந்த 17 ஐபிஎல் சீசன்களாக நடுவராக செயல்பட்டு வந்த அனில் சௌதரி இந்த முறை புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது.

இதையும் படிக்க: ஷாருக்கானின் அறிவுரையை நினைவுகூர்ந்த வெங்கடேஷ் ஐயர்!

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அனைத்து அணிகளும் வலுவாக இருப்பதால், இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

வர்ணனையாளராக அனில் சௌதரி

நாளை மறுநாள் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், கடந்த 17 சீசன்களாக நடுவராக செயல்பட்டு வந்த அனில் சௌதரி, இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்படவுள்ளார்.

ரஞ்சி கோப்பையில் கேரளம் மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் நடுவராக செயல்பட்ட அனில் சௌதரி, அந்தப் போட்டியுடன் நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் சர்வதேசப் போட்டியில் நடுவராக செயல்பட்டார்.

இதையும் படிக்க: மிரட்டிய டிராவிஸ் ஹெட்: விராட் கோலி அளித்த பரிசால் சதமடித்த நிதீஷ் ரெட்டி!

கடந்த வாரம் தனது 60-வது வயதில் அடியெடுத்து வைத்த அனில் சௌதரி இதுவரை 12 டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 64 டி20 போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.

Read Entire Article