ARTICLE AD BOX

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் தவெக கட்சித் தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய அளவில் அறியப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக GetOut எனும் கையெழுத்து இயக்கத்தை விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கையெழுத்திட்டனர். இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பிரசாந்த் கிஷோரிடமும் GetOut இயக்கத்தில் கையெழுத்திட ஆதவ் அர்ஜுனா அழைத்தார். ஆனால் அந்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
அந்த பலகையில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, மும்மொழித் எதிர் திட்டத் திணிப்புக்கு எதிர்ப்பு, அரசியல் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவசகம் ஆகியவற்றுக்கு எதிராக போராட உறுதியேற்போம் என எழுதப்பட்டு இருந்தது.
தவெக விழா மேடையில் அவர்கள் முன்னிறுத்திய கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த சிறப்பு அழைப்பாளர் பிரசாந்த் கிஷோரின் செயல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.