“Get Out ஹேஷ்டேக்”… உலக அளவில் செம டிரெண்டிங்…!!!

3 days ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தினால் நிதி தராததால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாஜகவினர் அந்த கொள்கையை ஏற்குமாறு கூறி வருகிறார்கள்‌.

இது தொடர்பாக பாஜக மற்றும் திமுகவினர் இடையே மோதல் போக்கு என்பது நிலவுகிறது. இதன் எதிரொலியாக என் வீட்டுக்கு அண்ணாமலை வருவேன் என்று கூறிய நிலையில் அவருக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்கள் என்று உதயநிதி கூறி இருந்த நிலையில் நான் தனியாகவே வருகிறேன் நேரத்தையும் இடத்தையும் மட்டும் குறித்து சொல்லுங்கள் என்று அண்ணாமலை பதிலடி கொடுத்திருந்தார்.

அதன் பிறகு திமுக ஐடி விங் கெட் அவுட் மோடி என்று இணையதளத்தில் பதிவிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார். இதை தற்போது திமுகவினரும் பாஜகவினரும் சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வரும் நிலையில் உலக அளவில் இந்த ஹேஷ்டேக்குகள் மிகவும் டிரெண்டாகி வருகிறது. மேலும் இதன் காரணமாக தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Read Entire Article