‘GET OUT STALIN’ என்னும் கேஷ்டாக் 10 லட்சம் பதிவுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது..!! – அண்ணாமலை

3 days ago
ARTICLE AD BOX

சென்னையில் மத்திய அரசைக் கண்டித்து கடந்த 18-ம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி கடந்த முறை தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது, தமிழக மக்கள் உங்களை ‘Go Back Modi’ என்று துரத்தி அடித்தனர். மீண்டும் அதை தமிழக மக்களிடம் முயற்சி செய்தால், இந்தமுறை ‘Go Back Modi’ கிடையாது. இந்தமுறை தமிழர்கள் ‘Getout Modi’ என்று துரத்துவார்கள்,” என்று பேசியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் கரூரில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் சரியான ஆளாக இருந்தால், அவர் வாயில் இருந்து ‘Get out Modi’ என்று சொல்லட்டும். உதயநிதி வீட்டுக்கு வெளியே, பாலிடாயில் பாபு என்று போஸ்டர் ஒட்டிவிட்டு வருவேன், அவர் பேசும் அதே பாஷையில் நானும் பேசுவேன். அவருக்கு ஒரு உலகத் தலைவரை மதிக்கத் தெரியவில்லை. உதயநிதி ஒரு கத்துக்குட்டி” என்று பேசியிருந்தார்.

திமுகவினர்எக்ஸ் தளத்தில் ‘கெட்-அவுட் மோடி’ என்று டிரென்டிங் செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ‘கெட்-அவுட் ஸ்டாலின்’ என எக்ஸ் தளத்தில் இன்று பதிவிடப்போகிறோம். யார் அதிகமாக டிரென்டிங் செய்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம் என அண்ணாமலை கூறி இருந்தார். சொன்னதை போல அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கெட்-அவுட் ஸ்டாலின் என இன்று காலை பதிவிட்டுள்ளார்.

கெட் அவுட் ஸ்டாலின் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் முதல் இடத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அண்ணாமலை வெளியிட்ட இந்த பதிவை லட்சக்‍கணக்‍கானோர் பார்வையிட்டு மறு பதிவிட்டுள்ளனர். கெட் அவுட் ஸ்டாலின் என்று அண்ணாமலை தொடங்கி வைத்துள்ள hash tag அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் வர தொடங்கியுள்ளது. 9மணி நேரத்தில் 10லட்சம் #GetOutStalin ட்வீட்களை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதப் பிரதமர் திரு..@narendramodi அவர்கள் மற்றும் திரு.@annamalai_k அவர்கள் ஆகியோர் கரத்தை வலுப்படுத்த நம் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு, நம் தலைவர் சொல்லிற்கேற்ப இன்று 9மணி நேரத்தில் 10லட்சம் #GetOutStalin ட்வீட்களை பதிவு செய்த அனைவருக்கும்… pic.twitter.com/RWDhlAlPj9

— Balaji M S (MSB) (@MSBalajiMSB) February 21, 2025

Read more : அன்லிமிடெட் டேட்டா.. அதுவும் ரூ.600க்கும் குறைவான விலையில்.. சிறந்த பிராண்ட்பேண்ட் திட்டங்கள்..

The post ‘GET OUT STALIN’ என்னும் கேஷ்டாக் 10 லட்சம் பதிவுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது..!! – அண்ணாமலை appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article