ARTICLE AD BOX
GBU: Money Heist உலகத்தில் நுழையும் குட் பேட் அக்லி.. வேற லெவல் ஸ்கெட்ச்.. சம்பவம் உறுதி மாமே!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். அஜித்துடன் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் நாளை அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கும் போது, குட் பேட் அக்லி படத்திற்கும் மனி ஹைஸ்ட் வெப் சீரிஸ்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அஜித் குமார் நடிப்பில் கடந்த 6ஆம் தேதி ரிலீஸ் ஆன விடாமுயற்சி படம் வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெறவில்லை. இதற்கு காரணம் படத்தில் அஜித்திற்கு என மாஸான காட்சிகள் என எதுவும் இல்லை. இந்நிலையில் படம் வரும் மார்ச் 3ஆம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இது மட்டும் இல்லாமல், படத்தை திரையரங்கில் இருந்து நீக்கவும் திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.

விடாமுயற்சி படம் சரியாக போகாததால் ரசிகர்கள் செம அப்செட்டில் இருந்தார்கள். ஆனால் ஜனவரி மாதமே குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. அப்படி இருக்கும்போது, படத்தின் அப்டேட்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. குறிப்பாக முதலில் த்ரிஷாவின் லுக் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் குறித்து அப்டேட் வெளியானது. அதன் பின்னர் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியானது.

டிரெண்ட்: டீசர் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் அஜித்தின் காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸில் இருப்பதைப் போல இடம் பெற்றிருந்தது. இது அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தியது. நாளை டீசர் வெளியாக உள்ளது, ரசிகர்கள் கடந்த சில நாட்களாக குட் பேட் அக்லி டீசர் என எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். இப்படியான நிலையில் குட் பேட் அக்லி படத்திற்கும் ரஷ்ய மொழியில் வெளியான மனி ஹைஸ்ட் (Money Heist) வெப் சீரிஸுக்கும் சம்பந்தம் இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏற்கனவே நடிகையும் அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி அந்த வீட்டின் முன் அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

Money Heist : அதாவது Money Heist வெப் சீரீஸில் ஒரு வீடு வரும். அதே வீடு, குட் பேட் அக்லி படத்தின் டீசர் அப்டேட்டில் இடம் பெற்றுள்ளது. இதைக் கண்டுபிடித்த ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்திற்கும் Money Heist வெப் சீரிஸுக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும். குறைந்த பட்சம் ஒரு டயலாக்காவது இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள். குட் பேட் அக்லி படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது.

