ARTICLE AD BOX
Fort Knox-ல் தங்கம் இருக்கிறதா?. இல்லையா?. களத்தில் இறங்கிய டிரம்ப் - எலான் மஸ்க்!
அமெரிக்காவின் Fort Knox-ல் உண்மையாகவே தங்கம் இருக்கிறதா?. இல்லையா?. என்ற சந்தேகம் எழுந்தநிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்தவேண்டும் என்று அதிபர் டிரம்பும், எலோன் மஸ்க்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக கடந்த ஜனவர் 20ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அரசாங்க பதவிகளில் மாற்றங்களை கொண்டு வந்தார். அமெரிக்க திறன் துறைக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா உரிமையாளருமான எலான் மஸ்கை டிரம்ப் நியமித்தார். இதற்கு தற்போது கடுமையான எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இந்தநிலையில், கடந்த வாரம், அமெரிக்காவின் ஃபோர்ட் நாக்ஸ் கருவூலத்தில் இருந்த 425 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் காணாமல் போய் இருக்கிறது. இதை அமெரிக்க மக்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்று எலான் மஸ்க் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
பூமியில் வெட்டியெடுக்கப்படும் 2 லட்சம் டன் தங்கத்தில், 17% ஆகும் பங்கு மத்திய வங்கிகளிடம் உள்ளது. இதில் அமெரிக்கா மத்திய வங்கி சுமார் 8,100 டன் தங்கத்தை வைத்திருக்கின்றது. அமெரிக்காவில் பெரும்பாலான தங்கம் குவியல்களை போர்ட் நாக்ஸ் என்ற உலகின் மிக பாதுகாப்பான தங்க சேமிப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான தங்க சேமிப்பகமாக பார்க்கப்படுகிறது.
ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் உயர் பதவிகளில் இருக்கும் எந்த அதிகாரிகளாலும் அவ்வளவு எளிதில் நுழைய முடியாது. போர்ட் நாக்ஸில் 147 மில்லியன் அவுன்ஸ் (அதாவது சுமார் 4,100 டன்) அமெரிக்க தங்கத்தை சேமித்து வைத்திருந்ததாக அறியப்படுகிறது. இதையடுத்து வெஸ்ட் பாயின்ட், டென்வர் மற்றும் நியூயார்க்கில் இருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
போர்ட் நாக்ஸின் கடைசி முழுமையான தங்க ஆய்வு 1953 ஆம் ஆண்டில் நடந்தது. அதன்பிறகு, 1974 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மட்டும் சுருக்கமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், போர்ட் நாக்ஸில் தங்கம் இருக்கிறதா இல்லையா என்பதை முழுமையாக சரிபார்க்க யாருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
இதனால், அங்கே உள்ள தங்கத்தின் இருப்பு குறித்து பெரும்பாலானோருக்கும் சந்தேகம் உள்ளது. போர்ட் நாக்ஸில் தங்கம் இருப்பதை பற்றி ஒரு முறையான கணக்கு அல்லது ஆய்வு எடுக்கப்படவில்லை என்பதால், பலருக்கும் அதில் உள்ள தங்கம் பாதுகாப்பாக இருக்கின்றதா என்பது குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா உரிமையாளருமான எலோன் மஸ்க் ஃபோர்ட் நாக்ஸில் இருக்கும் தங்கம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இவர்களின் முடிவு அமெரிக்காவின் பொருளாதார நிலை மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆய்வில், போர்ட் நாக்ஸில் தங்கம் இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டால், இன்றைய சந்தை விலையில் அந்த தங்கத்தை புதிய மதிப்பிடுதலுக்கு உட்படுத்துவதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதார நிலை பலமாக்கப்படலாம். இதனால் அமெரிக்காவின் இருப்புநிலையை வலுப்படுத்தக்கூடும். ஆனால், பற்றாக்குறை ஏற்பட்டால், அது பீதியைத் தூண்டலாம், டாலரை பலவீனப்படுத்தலாம் மற்றும் உலகளாவிய நிதி நிலைத்தன்மையை சீர்குலைக்கலாம்.
தங்கத்தில் குறைபாடு இருந்தால், உலகின் நிதி நிலைத்தன்மையை குறைக்கும் மற்றும் பெரிய பரபரப்புகளை உருவாக்கக்கூடும். இது நாணய மதிப்புகளின் உச்சகட்ட சரிவுகள் மற்றும் பங்கு சந்தை சுழற்சிகள் போன்றவற்றை தூண்டலாம். உலகின் பொருளாதார நிலைமையை மிகவும் பாதிக்கக்கூடும், அதனால் அமெரிக்காவின் தங்கக் குவியலின் நிலை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.