ARTICLE AD BOX
அமெரிக்கா பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை ஃபோர்ட் நாக்ஸ் எனப்படும் தங்க கருவூலத்தில் டெபாசிட் செய்து வைத்துள்ளது. இந்த கருவூலத்தில் உள்ள தங்கம் அப்படியே இருக்கிறதா என்பது தொடர்பாக விவாதங்கள் கிளம்பிய நிலையில்,இந்த தங்க கருவூலம் ஆண்டு தோறும் தணிக்கை செய்யப்பட்டு அங்கு இருக்கும் அனைத்து தங்கத்திற்கும் கணக்கில் கொண்டு வரப்படுவதாக கரூவூல செயலாளர் ஸ்காட் பெசண்ட் கூறியிருக்கிறார். குடியரசுக்கட்சியின் கவர்னர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "போர்ட் நாக்ஸ் கதவுகளை நாங்கள் திறக்க போகிறோம். போர்ட் நாக்ஸை ஆய்வு செய்ய போகிறோம்" என்றார்.