ARTICLE AD BOX

கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மொத்தம் 2,222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றதின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைக்க தடை இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்து, விசாரணையை மார்ச் 13-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.