ARTICLE AD BOX

Deep Seek தீங்கு விளைவிக்கும் என்றால் அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. Deep Seek செயலிக்கு தடை கூறிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, அவசர வழக்காக விசாரிக்கும் அளவிற்கு முகாந்திரம் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தென் கொரியா, சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் (DeepSeek) செயலியை பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக தடை விதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.