Fire Bala: வசூல் வேட்டை நடத்திய ஃபயர்.. பாலாவுக்கு தங்க செயின் போட்ட இயக்குநர்.. தரமான வீடியோ!

3 days ago
ARTICLE AD BOX

Fire Bala: வசூல் வேட்டை நடத்திய ஃபயர்.. பாலாவுக்கு தங்க செயின் போட்ட இயக்குநர்.. தரமான வீடியோ!

News
oi-Mohanraj Thangavel
| Published: Friday, February 21, 2025, 8:59 [IST]

சென்னை: பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்து கடந்த வாரம் ரிலீஸ் ஆன படம் ஃபயர். நாகர்கோவில் பகுதியில் வசித்து வந்த காசி என்ற பாலியல் குற்றவாளியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. படத்தை ஜே. சதீஷ் குமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். படத்தில் ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால் , சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். விழிப்புணர்வு நோக்கத்துடன் எடுக்கப்பட்ட இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஜே. சதீஷ் குமார், பாலாஜி முருகதாஸுக்கு தங்க செயின் அணிவித்தார்.

ஃபயர் படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தின் புரோமோசன், அப்டேட்கள் என ரச்சிதாவின் கிளாமர் காட்சிகளை அதிகம் பயன் படுத்தினார்கள். குறிப்பாக பாலாஜி முருகதாஸ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி இருவரும் ஒரு பாடல் காட்சியில் மிகவும் க்ளோஸாக நடித்து இருந்தார்கள். இந்தப் பாடலை படத்தின் புரோமோசனின்போது படக்குழு பயன்படுத்தியது. படத்தில் பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் நடித்தார்கள். படம் வொர்க் அவுட் ஆகுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Fire Balaji Murugadoss Fire Success

படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக மாறியது. இதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. படம் இதுவரை சுமார் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தின் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோக்களை படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

ஃபயர் ஹிட்: படம் ரிலீஸ் ஆன தினத்தில் பாலாஜி முருகதாஸை ரசிகர்கள் பாராட்டினர். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த பாலாஜி, தியேட்டர் வாசலில் அழுதார். மேலும் அவர் அப்போது பேசும்போது, இளம் நடிகர்கள் வரும்போது கடுமையான விமர்சனத்தால், அவர்களின் நம்பிக்கையை பலரும் சீரழிக்கிறார்கள். மேலும் பின்புலம் கொண்ட இளம் நடிகர்கள் மீது அப்படியான விமர்சனங்களை யாரும் முன்வைப்பதில்லை எனவும் கூறினார். இவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது.

Fire Balaji Murugadoss Fire Success

சம்பளத்திற்கு மேல்: படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் பாலாஜி பேசுகையில், இந்த படத்தில் நடிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். காரணம், உடன் நடிக்கும் சக நடிகைகளின் சௌகரியம் மிகவும் முக்கியம் எனக் கூறினார். இவரை அடுத்து பேசிய படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் பேசும்போது, பாலாஜி கூறியது மிகவும் சரியான விஷயம், இந்தப் படத்தில் நடிக்க முதலில் தைரியம் வேண்டும். அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. சக நடிகைகளின் சௌகரியமும் அதில் அடங்கி உள்ளது. அப்போது சக நடிகைகளின் சௌகரியத்தையும் கவனத்தில் வைத்து நடித்தார் பாலாஜி. படத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு நான் ஏற்கனவே சொன்ன சம்பளத்தை விடவும் கூடுதலாக கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Fire Balaji Murugadoss Fire Success

வீடியோ: படம் தற்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளதால், பாலாவுக்கு இயக்குநர் ஜே. சதீஷ் குமார், தங்க செயின் அணிவித்தார். தான் பிரைவேட் ஜெட் கேட்டதாகவும், ஆனால், இயக்குநர் தனக்கு தங்க செயின் போட்டு விட்டதாகவும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார். மேலும் பிக் பாஸில் தனக்கு வாக்களித்த ரசிகர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Fire Balaji Murugadoss Fire Success

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Fire Movie Success Director JSK Presents Gold Chain To Balaji Murugadoss
Read Entire Article