ARTICLE AD BOX
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற லோக்சபா தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளைக் குறைக்கும், எம்.பிக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். குறிப்பாக தென் மாநிலங்களை இது வெகுவாக பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தென் மாநிலங்களுக்கு அநீதி செய்யும் மத்திய அரசின் இந்தச் செயல்பாட்டை எதிர்த்தும் தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு 'தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!' என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் பல பகுதியிகளில கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது. மேலும் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிற மாநில பிரதிநிதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
A historic day for Indian federalism!
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was… pic.twitter.com/Wra2NmccIA
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்களுக்கு கடிதங்கள் எழுதியும் பிரதிநிதிகளை அனுப்பியும் அழைப்பு விடுத்தார்.
அந்த வகையில் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவே தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ஆகியோர் சென்னை வருகை தந்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன் தினமே (வியாழக்கிழமை) சென்னை வந்தடைந்தார்.

கர்நாடகாவில் இருந்து துணை முதல்வர் சிவக்குமார், காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னண்ணா மற்றும் ராஜேந்திர சோழன், ஆந்திராவை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர். கட்சியின் முன்னாள் எம்.பி. மிதுன் ரெட்டி, தெலுங்கானா பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் வினோத்குமார், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கம்பக்குடி சுதாகரன், ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ், பிஜூ ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. அமர் பட்நாயக் ஆகியோர் இன்று காலை வருகை தர உள்ளனர்.
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு, பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட உள்ளன.
இன்று காலை 10 மணி முதல் பிறபகல் 2 மணி வரை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.பரபரக்கும் இந்த 7 மாநில பிரதிநிதிகள் கூட்டத்தின் செய்திகளை உடக்குடன் தெரிந்து கொள்ள விகடனுடன் இணைந்திருங்கள்
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
