Fact check: ஆதவ் அர்ஜுனா தவெகவில் இருந்து இடைநீக்கம்.. தீயாக பரவும் செய்தி! உண்மை என்ன?

13 hours ago
ARTICLE AD BOX

Fact check: ஆதவ் அர்ஜுனா தவெகவில் இருந்து இடைநீக்கம்.. தீயாக பரவும் செய்தி! உண்மை என்ன?

Fact Check
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளாக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா.. இவர் தவெக கட்சி பணிகளைத் தீவிரமாகச் செய்து வரும் சூழலில் திடீரென ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகச் செய்திகள் வெளியானது. பலரும் இதை உண்மை என நம்பத் தொடங்கிய நிலையில், இது தொடர்பாக தவெக விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டவர் ஆதவ் அர்ஜுனா. விசிகவில் இருந்த போதே இவர் தொடர்ச்சியாகக் கூட்டணிக் கட்சியான திமுகவை விமர்சித்து வந்தார். இதையடுத்து விசிக இவரைத் தற்காலிகமாக நீக்கிய நிலையில், சில நாட்களிலேயே மொத்தமாக அங்கிருந்து விலகினார்.

Aadhav Arjuna Thirumavalavan politics

தவெக விஜய்

அதன் பிறகு சில காலம் அமைதியாக இருந்த அவர், திடீரென விஜய்யின் தவெகவில் ஐக்கியமானார். அங்கு அவருக்குத் தேர்தல் பிரிவின் பொதுச் செயலாளராகப் பதவி வழங்கப்பட்டது. தவெகவுக்காக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் ஆதவ் அர்ஜுனா, பல்வேறு நிகழ்ச்சிகளையும் விஜய்க்காக ஒருங்கிணைத்து வருகிறார். சமீபத்தில் நடந்த இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியைக் கூட ஆதவ் அர்ஜுனா தான் ஒருங்கிணைத்து இருந்தார்.

ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்?

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக இன்று பிற்பகலில் செய்திகள் வெளியானது. முதலில் இணையத்தில் இந்தத் தகவல் வெளியான நிலையில், பிறகு ஓரிரு ஊடகங்களிலும் வெளியானது. இதனால் பலரும் இதை உண்மை என்றே கூட நம்பத் தொடங்கினர். தமிழக வெற்றிக் கழக செயல்பாடுகளில் ஆதவ் அர்ஜுனா தீவிரம் காட்டி வந்த நிலையில், திடீரென அவர் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏன் என்ற குழப்பமும் பலருக்கும் எழுந்தது.

 ஸ்டாலினுக்காக நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருந்த திருமா? தீயாக பரவும் வீடியோ! உண்மை என்ன
Fact Check: ஸ்டாலினுக்காக நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருந்த திருமா? தீயாக பரவும் வீடியோ! உண்மை என்ன

உண்மை என்ன

இதற்கிடையே இந்த இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம் விளக்கமளித்துள்ளது. ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் என்பது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்றும் இது வெறும் வதந்தி என்றும் என்றும் தவெக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக சார்பில் அடுத்து பொதுக்குழு நடந்து வரும் சூழலில் அதற்கான பணிகளில் ஆதவ் அர்ஜுனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஆதவ் அர்ஜுனா

விசிகவில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் தான் ஆதவ் அர்ஜுனா.. விளையாட்டு வீரர், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் தேர்தல் ஆலோசகர் குழுவில் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் எனப் பல முகம் கொண்ட ஆதவ் அர்ஜுனா இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். மேலும், இவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆவார்.

மாறிய காட்சிகள்.. புஸ்ஸி ஆனந்த் உடன் கூடவே களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! தவெகவில் திடீர் மாற்றம்
மாறிய காட்சிகள்.. புஸ்ஸி ஆனந்த் உடன் கூடவே களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! தவெகவில் திடீர் மாற்றம்

விசிகவில் இருந்த போது அவருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. விசிகவில் இருந்தபோதே அவர் கூட்டணிக் கட்சியான திமுகவை விமர்சிக்கும் வகையில் பேசி வந்தார். குறிப்பாக அம்பேத்கர் குறித்த புத்தக வெளியிட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா, திமுக தலைமையை நேரடியாக விமர்சிக்கும் வகையில் பேசினார். இதையடுத்து அவரை தற்காலிகமாக நீக்கி விசிக தலைமை உத்தரவிட்ட நிலையில், அவர் முழுமையாகக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னரே அவர் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Fact Check

வெளியான செய்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் பரவுகிறது.

முடிவு

ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் என பரவும் தகவல் பொய் என்று தமிழக வெற்றிக் கழகமே விளக்கமளித்துள்ளது

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
English summary
No Aadhav arjuna has not been been suspended from the party says TVK (ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து இடைநீக்கம் என பரவும் பொய் தகவல்): Fake news on suspension of Aadhav arjuna is spreading in internet.
Read Entire Article