ARTICLE AD BOX
Dragon Twitter Review: ஓ மை கடவுளே எனும் வெற்றிப் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, கோமாளி, லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் டிராகன், கல்லூரி காலத்தில் ஜாலியாக அரியர் வைத்து சுற்றித் திரியும் ஒருவன் வாழ்க்கையில் முன்னேறுவது பற்றி பேசும் கதை தான் டிராகன் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் நடித்துள்ளனர். அவர்களுடன் விஜே சித்து, ஹர்ஷத் கான் போன்றோரும் நடித்துள்ளனர். இந்தப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் சிலம்பரசன் இந்தப்படத்தை பார்த்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
ட்ராகன் படத்தில் பிரதீப்பின் மாற்றம் குறித்து படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஹிந்துஸ்தான் தமிழ் தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அந்த பேட்டி இங்கே
‘லவ் டு டே’ பிரதீப்ப மக்கள்ட்ட ரொம்ப அதிகமா கொண்டு சேர்த்த படம்.. அவர டிராகன்ல எப்படி வித்தியாசப்படுத்தப்போறீங்க?
நீங்க ட்ராகன் படம் பாருங்க.. லவ் டுடே படத்தோட சாயல் எங்கேயும் வராது. படத்தோட இரண்டாம் பாதியில மட்டும் லவ் டுடே படத்த நியாபகப்படுத்துற மாதிரி ஒரு விஷயம் வச்சிருக்கேன். அது லவ் டுடே ரசிகர்களுக்காக..
லவ் டுடே படத்துல அவனோட தோற்றத்த வச்சு நிறைய விமர்சனங்கள் வந்துச்சுல்ல; இந்தப்படத்துல அவன முழுக்க, முழுக்க ஒரு ஹீரோ மெட்டீரியலா ட்ரீட் பண்ணிருக்கேன். அவன் பேசுற விதமே வேறயா இருக்கும். அவனே இத நிறைய இடங்கள்ல ஃபீல் பண்ணி சொல்லிருக்கான்.
பிரதீப்ப இந்தப்படத்துல ஃபைட் பண்ண வச்சிருக்கேன்.. அவனோட மேனரிசம், பாடிலாங்குவேஜ்னு நிறைய மாத்திருக்கேன். ஆனால் அதே சமயம் படமா, ஓ மை கடவுளே படத்த பார்க்கும் போது உங்களுக்கு என்ன ஃபீல் கிடைச்சிதோ அந்த ஃபீல் இந்தப்படத்துலையும் கிடைக்கும்’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்