ARTICLE AD BOX
Dragon movie: கொண்டாட்டத்தில் டிராகன் படக்குழு.. சிறப்பு காட்சிக்கு அனுமதி!
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாட் லோஹர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள டிராகன் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ளனர். முன்னதாக படத்தின் பாடல்கள், டிரெயிலர் என வெளியாகி மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. தற்போது வரை படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினமும் பிரபல மாலில் பிரதீப் ரங்கநாதன், கயாட் லோஹர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ரசிகர்களிடையே வைப் செய்தனர். படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்ததை பார்க்க முடிந்தது. நாளை படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதித்து உள்ளதாக தற்போது படக்குழுவினர் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

டிராகன் படம்: நடிகர் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டிராகன் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் பிரதீப். படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி மிகச் சிறப்பான வரவைப்பை பெற்றுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் இன்றைய தினமும் பிரபல மாலில் பிரதீப் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற மிகச் சிறப்பான பிரமோஷன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு காட்சிக்கு அனுமதி : ஏராளமான ரசிகர்கள் வெள்ளத்திற்கிடையில் இந்த பிரமோஷன் நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இணைந்து பிரதீப் ரங்கநாதனும் மாஸ் காட்டினார். படத்தில் தனக்கு பிடித்த பாடலை ரசிகர்களிடையே பாடி காட்டி அவர் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ஏராளமான திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதித்துள்ளதாக தற்போது படக்குழுவினர் உற்சாகம் தெரிவித்துள்ளனர். நாளை காலை 9 மணிக்கு படத்தின் சிறப்பு காட்சிகள் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான பிரமோஷன்கள்: இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் டிராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களுக்கு இடையில் மிகப்பெரிய அளவில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் எந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறும் என்பது குறித்து ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
யூ/ஏ சான்றிதழ்: டிராகன் படத்திற்கு சென்சார் போர்ட் யூ/ஏ சான்றிதழை கொடுத்துள்ளனர். படத்தின் ரன் டைம் 2 மணி 35 நிமிடங்களாக உள்ளன. முன்னதாக வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் மிகச்சிறப்பான வகையில் அமைந்து படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பை கொடுத்துள்ளன. படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள நிலையில் இந்தப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு முந்தைய படங்களை போலவே மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.