Dragon Movie Box Office: 2ம் நாளில் எகிறிய வசூல்.. இது உண்மையான கதற கதற தான்.. டிராகனைப் பார்க்க படையெடுக்கும் கூட்டம்..

2 days ago
ARTICLE AD BOX

இந்தப் படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் நடித்துள்ளனர். அவர்களுடன் விஜே சித்து, ஹர்ஷத் கான் போன்றோரும் நடித்துள்ளனர்.ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

டிராகன் வசூல்

இந்தப் படம் 2 ஆம் நாள் வசூல் விவரங்கள் குறித்து திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னில்க் வெளியிட்டுள்ளது. அதன்படி, டிராகன் திரைப்படம் தமிழ்நாடு அளவில் 2 ஆம் நாளில் மட்டும் 8.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்திய அளவில் 2 ஆம் நாளில் 16. 75 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

சாக்னில்க் அளித்த தகவலின் படி, தமிழில் பிப்ரவரி 21ம் தேதி வெளியான படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படமாக டிராகன் உள்ளது. இந்தப் படம், முதல் நாளில் மட்டும் 6 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறுகிறது. முதல் நாள் படம் பார்த்தவர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனத்தால் அடுத்தடுத்த நாள் படத்திற்கு வருவோரின் கூட்டம் அதிகரித்துள்ளது.

ஹவுஸ் ஃபுல்லான தியேட்டர்கள்

டிராகன் படம் ப்ரீ புக்கிங்கில் பெரும்பாலான தியேட்டர்களில் குறைவான புக்கிங்கே ஆகியிருந்தது. பெரும்பாலான ரசிகர்கள் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை. இதற்கு காரணம் வேட்டையன், கங்குவா, விடாமுயற்சி என பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதே.

 அதனால் இந்தப் படத்திற்கு முதல் நாள் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது. ஆனால், 2ம் நாள் படத்தின் விமர்சனங்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுக்கத் தொடங்கினர். அதே போல ஞாயிற்றுக் கிழமையான இன்று பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாகவே இருக்கிறது. இதனால் டைரக்டர் சொன்ன நிஜ கதற கதற இது தான் என பலரும் கூறி வருகின்றனர்.

டிராகன் கதை

ட்ரெய்லரில் பார்த்த அதே தீம் தான் டிராகன் படமும். கல்லூரிக்குள் நுழையும் ஒரு இளைஞன், அதுவும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் கல்லூரி படிப்பில் நுழையும் இளைஞன், அவன் படும் சிரமம், கல்லூரியை முடிக்கும் வரை அவன் சந்திக்கும் பாடுகள், கல்லூரியை முடித்த பின் எப்படி மாறும் வாழ்க்கை என்பது தான் டிராகன் படத்தின் கதை.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

லவ் டுடே வெற்றிக்குப் பின் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படம் என்பதால், பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால், லவ் டுடே அளவுக்கு இருந்ததா என்றால், இல்லை என்கிற பதில் தான் வரும். இன்றைய இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். அதற்கு தேவையான நட்பு, காதல். காமெடி எல்லாமே படம் முழுக்க வருகிறது.

இளைஞர்களுக்கான முழு விருந்தும், அவர்கள் வழியில் கிடைக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம். முதல் பாதி கொஞ்சம் இழுத்து பிடித்து போகிறது. இரண்டாம் பாதி, முதல் பாதியை விட பெட்டராக இருக்கிறது. கிட்டத்தட்ட படம் முடிந்த பிறகு, அடுத்த 15 நிமிடத்தில் வம்பாக சென்டிமெண்ட் சேர்க்க வேண்டும் என்பதற்காக, சேர்த்துள்ளனர். 

 

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article