DMK Vs NTK: ’சைமன் செபாஸ்டியனை செந்தமிழன் சீமான் ஆக்கியது நான்!’ நாதகவை விளாசும் ராஜீவ் காந்தி!

3 hours ago
ARTICLE AD BOX

திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணல்:-

நான் சொத்து சேர்த்துவிட்டதாக சில அவதூறுகளை பார்த்தேன். சொத்து சேர்ப்பது என்பது எல்லோருக்குமான உரிமை, வாய்ப்பு, வசதி இருந்தால் நேர்மையாக சொத்து சேர்த்துக் கொள்ளலாம். வருமானவரி கட்டிக் கொள்ளலாம். அடுத்தவனிடம் திரள்நிதி வாங்கி அதை தன் குடும்பத்தையும், வயிற்றையும் வளர்ப்பவன் ராஜீவ் காந்தி இல்லை. சைமன் செபாஸ்டியனாக இருந்து செந்தமிழனாக சீமான் மாறினாரே அவரிடம் இதை கேட்டு இருக்க வேண்டும்.

சைமன் செபாஸ்டியன் என்ற பெயரை மாற்றியது நான்!

சைமன் செபாஸ்டியன் என்ற பெயரை செந்தமிழன் என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் சீமான் கேட்டார். அதை கெஜட்டில் மாற்றிக் கொண்டுத்தது நான்தான். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் சீமான் யார் என்பது எனக்கு தெரியும். இப்போது அவருக்காக பேசும் யாருக்கும் தெரியாது. 2008ஆம் ஆண்டு இறுதியில் ஈரோடு வழக்கில் கைதாகிவிட்டு, சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் கோவை சிறையில் இருந்தனர். அப்போது சீமானை நான்தான் பெயிலில் எடுத்து வந்தேன். 

மாயாண்டி குடும்பத்தார் ஷூட்டிங்கில் இருந்தார்!

அப்போது ஈழப்போர் உச்சத்தில் உள்ளது, தினமும் ஒருவர் போராடுகிறார்கள். வாருங்கள் போராடுவோம் என சீமானை அழைத்தேன். ஆனால் நான் என் வயிற்றுப் பிழப்புக்கு மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டார். முத்துக் குமார் செத்த போதும் அவர் மாயாண்டி குடும்பத்தார் படப்பிடிப்பில் இருந்தார். முத்துக்குமார் இறந்த பிறகு மூன்றாவது நாள்தான் அவர் வந்தார். அப்போது அவர் ஷூட்டிங்கில் ஸ்பெசலாக இருந்தார். 

ஈழத்தமிழர்களிடம் சுரண்டல் 

நாம் தமிழர் என்ற பெயரை வைத்தது ராஜீவ் காந்தி, நாம் தமிழர் கட்சிக்கு மாவட்ட செயலாளர்களை போட்டது ராஜீவ் காந்தி, நாம் தமிழருக்காக ஊரு ஊராக செறுப்புத் தேய நடந்தவன் ராஜீவ் காந்தி.  எனக்கு முகவரியும், வாழ்கையும் கொடுப்பது திராவிடமும், தந்தை பெரியாரும்தான். நான் பேசும் தத்துவம்தான் வசதியும் வாய்ப்பையும் கொடுத்து உள்ளது. 

நான் தனிநாடு கட்டபோகிறேன் என்று சொல்லி, சொந்த நாட்டில் வாழ வழியின்றி வெளிநாட்டில் உள்ள உறவுகளிடம் பிச்சை எடுத்து, அவர்களை சுரண்டி இசுசூ கார், 2 லட்சம் வீட்டு வாடகை, 50 பவுன்சர்கள் உடன் உள்ளார். மேடையில் வெங்காயம் எறி, குண்டு எறிகிறேன் என்று சொல்கிறார்கள். வெங்காயத்தை வீசி பார்ப்போம், வெடிகுண்டு வீசப்படுகிறதா என்று பார்ப்போமா? தந்தை பெரியாரை பொதுவெளியில் ஒருமையில் ஆதாரமில்லாமல் சீமான் பேசுகிறார். நானும் ரவுடிதான் என்று சொல்லும் ஆளிடம் சென்று ஆதாரம் கேட்க முடியுமா? என ராஜீவ் காந்தி பேசினார். 

 

  

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
Read Entire Article