ARTICLE AD BOX
Dividend மழை.. டக்கரான 7 நிறுவனங்கள்.. இன்னைக்குள் வாங்கினால் டிவிடெண்ட் வருவாய் நிச்சயம்..!
பதிவு தேதியில், யாரிடம் எல்லாம் பங்குகள் இருக்கிறதோ அவர்கள் டிவிடெண்ட் பெற தகுதியானவர்கள் ஆவர். அதேசமயம், டிவிடெண்ட் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிதாக பங்குகளை வாங்க விரும்பினால், டிவிடெண்ட் பதிவு தேதிக்கு ஒரு நாள் (ex-divident) முன்னதாக வாங்க வேண்டும். அதற்கு அடுத்த நாட்களில் பங்குகளை வாங்கினால் அறிவிக்கப்பட்ட டிவிடெண்ட் பெற தகுதி கிடையாது.
ஸ்டாக்எட்ஜ் தரவுகளின்படி, கேபிஐடி டெக்னாலஜிஸ். எல்டி ஃபுட்ஸ் உள்பட 7 நிறுவனங்கள் தனது பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளன. இந்நிறுவனங்களின் ex-divident தேதி பிப்ரவரி 4. எனவே இன்றைக்குள் இந்நிறுவன பங்குகளை வாங்கினால் டிவிடெண்ட் பெற தகுதி பெறலாம்.
ஐ.டி. துறையை சேர்ந்த கேபிஐடி டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு விலை கடந்த சனிக்கிழமையன்று வர்ததகத்தின் முடிவில் ரூ.1,415.75ஆக இருந்தது. இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,430.95வரை சென்றது.
ஆர்த்தி டிரக்ஸ் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.1 இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு விலை கடந்த சனிக்கிழமையன்று வர்ததகத்தின் முடிவில் ரூ.413.40ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு விலை கடந்த சனிக்கிழமையன்று வர்ததகத்தின் முடிவில் ரூ.1,415.75ஆக இருந்தது. இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.413.45ஆக இருந்தது.
எல்டி .ஃபுட்ஸ் பங்கு ஒன்றுக்கு 50 காசுகள் இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு விலை கடந்த சனிக்கிழமையன்று வர்ததகத்தின் முடிவில் ரூ.383.25ஆக இருந்தது. இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.392.40வரை சென்றது.
எஸ்ஆர்எஃப் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.3.60 அறிவித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு விலை கடந்த சனிக்கிழமையன்று வர்ததகத்தின் முடிவில் ரூ.2,826.55ஆக இருந்தது. இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.2,918.05வரை சென்றது.
ஒரியண்ட் எலக்ட்ரிக் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 75 காசுகள் இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு விலை கடந்த சனிக்கிழமையன்று வர்ததகத்தின் முடிவில் ரூ.227.85ஆக இருந்தது. இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.242.50வரை சென்றது.
இமாமி நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.4 இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு விலை கடந்த சனிக்கிழமையன்று வர்ததகத்தின் முடிவில் ரூ.626.10ஆக இருந்தது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் ரூ.6 குறைந்து ரூ.619.80ல் இருந்தது.
ஆரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.1 இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு விலை கடந்த சனிக்கிழமையன்று வர்ததகத்தின் முடிவில் ரூ.1,504.50ஆக இருந்தது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் ரூ.50 குறைந்து ரூ.1,444.05ல் இருந்தது.