Director Ashwath Marimuthu: 'நிறைய ஸ்மைல்.. கொஞ்சம் கண்ணீர்.. இது முழுக்க முழுக்க அஸ்வத் படம்..' டைரக்டர் பேட்டி

4 days ago
ARTICLE AD BOX

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், காயடு லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 21 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 34 வயதான இயக்குனர் இந்துஸ்தான் டைம்ஸிடம் படம் குறித்து பேசினார்.

ரெண்டும் ஒன்று தான்

அப்போது, " டிராகன் படம் ஓ மை கடவுளே படத்திலிருந்து எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஸ்வத் மாரிமுத்து, "படத்தின் மையக் கதையை பொறுத்தவரை, கதை சொல்லப்படும் விதமும், படத்தில் உள்ள உணர்ச்சிகளின் அடிப்படையிலும் பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும்.

நிறைய ஸ்மைல்.. கொஞ்சம் கண்ணீர்

இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் நிறைய புன்னகையுடனும், கண்களில் கொஞ்சம் கண்ணீருடனும் தியேட்டர்களை விட்டு வெளியே வரப் போகிறார்கள். படத்தை பார்ப்பவர்களும் தாங்களே வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்து மகிழ்ச்சியுடன் படத்தை விட்டு வெளியேறப் போகிறார்கள். அதுவே படத்தின் வெற்றியாக அமையும்.

இதுதான் கதை

ஆனால் படத்தின் கோணத்தைப் பொறுத்தவரை, ஓ மா கடவுளே ஒரு காதல் கதை. டிராகன் படம் ஒரு கல்லூரி பின்னணியைக் கொண்டு பயணிக்கும் கதை. என்ன சம்பாதித்தாலும், அதை நேர்மையாக சம்பாதித்து, குடும்பத்தை கவனித்து, மகிழ்ச்சியாக வாழ்ந்தால் தான் வெற்றி பெறுவீர்கள் என்பதுதான் படத்தின் கரு.

டிரெய்லரில் நாம் வெளிப்படுத்தாத ஒரு முக்கிய கருத்தை மையப்படுத்தியே படம் நகரும். டிராகன் படம் ஓ மை கடவுளே படத்தைக் காட்டிலும் இன்னும் கமர்ஷியலான, பொழுதுபோக்கு படமாக இருக்கும்" என்று விளக்கினார்.

ரசிகர்களை ஈர்க்கும்

ராகவன் 'டிராகன்' தனபாலாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன், 2022 ஆம் ஆண்டு வெளியான லவ் டுடே படத்தின் மூலம் ரூ .100 கோடி பிளாக்பஸ்டர் கொடுத்த டைரக்டர் மற்றும் இயக்குநர் எனும் அடையாளத்தை தனக்கானதாக வைத்திருந்தார். அதே சமயம், டிராகன் படம் சாதாரண ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் மற்றும் ஈர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று அஷ்வத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க அஸ்வத் படம்

மேலும் பிரதீப்பும் தானும் நல்ல நண்பர்கள் என்றும், டிராகன் எழுதத் தொடங்குவதற்கு முன்பு ஆரம்பத்தில் நிறைய பேசினோம் என்றும் கூறினார். ஆனால், இந்தப் படம் முழுக்க முழுக்க அஸ்வத் மாரிமுத்து படமாக மட்டுமே இருக்கும் என்றும் கூறினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article