Delhi Election Result: டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று.! டவ் ஃபைட்டில் ஆம் ஆத்மி , பாஜக

2 hours ago
ARTICLE AD BOX

இந்திய அளவில் பெரும் எதிர்பாக்கப்பட்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது, இன்று நடைபெறும் நிலையில் போட்டியானது கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி அரியணை யாருக்கு என்று, சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். ஆகையால், ஏபிபி நாடு வலைதள பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், தேர்தல் பிந்தைய  கருத்து கணிப்பு முடிவுகள் என்ன தெரிவித்திருக்கின்றன என்பதையும் பார்த்து விடுவோம்.

70 தொகுதிகள்

டெல்லி சட்டப்பேரவையில்  உள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. இங்கு 66.25 சதவிகித வாக்குகள் பதிவாகியதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையானது, காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு, 36 தொகுதிகளில் வெற்றி தேவைப்படும்.

டெல்லி ஒன்றிய பிரதேசமாக இருந்தாலும், சட்டப்பேரவையை கொண்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது. சட்டப்பேரவையில் 70 தொகுதிகள், மக்களவையில் 7 தொகுதிகள் என  குறைந்த அளவில் இருந்தாலும், இந்திய நாட்டின் தலைநகரமாகவும் இருப்பதால், மிகுந்த அதிகாரம் உள்ள இடமாக, டெல்லி திகழ்கிறது என்றே சொல்லலாம்.

மும்முனை போட்டி:

இத்தேர்தலில் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையேயான மும்முனை போட்டி நிலவுகிறது. மும்முனை போட்டி என்றாலும் , ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையேயான போட்டிதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, கருத்து கணிப்புகளும், அவ்வாறே உணர்த்துகின்றன.

இந்த தருணத்தில் 4வது முறையாக தொடர்ந்து ஆட்சி பீடத்தில் தொடரும் முனைப்பில் ஆம் ஆத்மியும்; மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், 27 ஆண்டுகளுக்கு பிறகு, டெல்லியில் ஆட்சியை பிடிக்க வேண்டிய கவுரவ பிரச்னையிலும் பாஜக இருப்பதை பார்க்க முடிகிறது.

மேலும், டெல்லியை பொருத்தவரை , கடந்த 2 தேர்தல்களில் மத்தியில் பாஜக, மாநிலத்தில் ஆம் ஆத்மியை தேர்வு செய்கின்றனர்.

கருத்து கணிப்புகள்:

தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகளில், மேட்ரிக்ஸ் நிறுவனம் கணிப்பின்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வெற்றி தேவைப்படும் நிலையில்,  பாஜக கூட்டணிக்கு  35 முதல் 40 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஆம் ஆத்மி கூட்டணிக்கு  32 முதல் 37 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக ஒரு தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது. இதன் மூலம், பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.

என்.டி.டி,வி கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 35 முதல்  40 தொகுதிகளிலும்; ஆம் ஆத்மி 32 முதல் 37 தொகுதிகளிலும்; காங்கிரஸ் ( 0- 2 ) தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

சி.என்.என் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி அதிகபட்சமாக 44 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும்; காங்கிரஸ் ஒரு தொகுதிகளில்கூட வெற்றி பெறாது எனவும் கணித்துள்ளது.

இதர நிறுவனங்களில் கணிப்புகளுக்கு, அதன் பெயரை கிளிக் செய்யவும்.

இதில், பல நிறுவனங்கள் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள நிலையில், வீ பிரிசைடு மற்றும் மைண்ட் பிரேக் ஆகிய நிறுவனங்கள் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என கணித்துள்ளது.

எனினும் , இன்னும் சில மணி நேரத்தில், அதிகாரப்பூர்வ முடிவை, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ள நிலையில், முடிவுகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் ஏபிபி நாடு-வுடன் Tamil News, Latest Tamil News, Breaking News, Today News in Tamil, Tamil Nadu News Today - தமிழ் செய்திகள்- ABP Nadu

Read Entire Article